Tamil Nadu Roundup: எடப்பாடி நம்பிக்கைக்கு ஷாக் கொடுத்த அன்புமணி, அரசு போட்ட திடீர் ஆர்டர் - தமிழ்நாட்டில் இதுவரை

5 months ago 4
ARTICLE AD

“ஸ்டாலின் கையில் கொடுக்கும் மனுவுக்குத் தீர்வு கிடைக்கும்' என்று நீங்கள் நம்பிக் கொடுக்கும் மனுக்களுக்கும் - என்னிடம் சொல்லும் குறைகளுக்கும்| தீர்வு காணப்படும். ஒவ்வொரு குரலும் கேட்கப்பட வேண்டும். உங்களது குறைகள் தீர்க்கப்பட வேண்டும்”
-மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு முதலமைச்சர்

“NDA கூட்டணியில் பாமகவும் இருக்கிறது. நம்மோடு வருவார்கள் என எதிர்பார்க்கிறேன்”
-அரியலூர் பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சு

”ஆட்சி அதிகாரத்தில் பங்கு கோரப்படும்” - பாமகவின் 37வது ஆண்டு விழாவை ஒட்டு கட்சி தலைவர் அன்புமணி அறிக்கை

கிராம ஊராட்சிகளில் அனுமதி பெறாமல் கட்டப்படும் கட்டடங்களை மூடி சீல் வைக்க ஊராட்சிகளின் நிர்வாக அலுவலர்களுக்கு அதிகாரம் - அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை கடிதம்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.360 குறைந்து ரூ.72,800க்கும், கிராம் ரூ.9,100க்கும் விற்பனை

கும்பகோணம் பள்ளி தீ விபத்தின் 21ம் ஆண்டு நினைவு தினம். உயிரிழந்த 94 குழந்தைகளின் உருவப் படத்திற்கு அவர்களுக்குப் பிடித்த உணவுப் பொருட்களை படைத்து பெற்றோர், பொதுமக்கள் அஞ்சலி

தமிழ்நாட்டில் நாளை முதல் அடுத்த 6 நாட்கள் ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு -வானிலை ஆய்வு மையம் 12 செ.மீ முதல் 20 செ.மீ வரை மிக கனமழைக்கு வாய்ப்பு என்பதால் ஜூலை 17, 18, 19, 20, 21, 22 ஆகிய 6 நாட்கள் ஆரஞ்சு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

திருச்சி பஞ்சப்பூரில் திறக்கப்பட்ட முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையம் இன்று முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் தொகுப்பூதிய ஊழியர்களுக்கு 5% ஊதிய உயர்வு - பள்ளிக் கல்வித் துறையின் மாநில திட்ட இயக்குனர் உத்தரவு

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே உள்ள கிராமங்களில் செல்போன் சிக்னல் கிடைக்காததால் அவதிக்குள்ளாகும் மக்கள் - தொலைத் தொடர்பு வசதி ஏற்படுத்தித் தர கிராம மக்கள் கோரிக்கை

Read Entire Article