தவெக தலைவர் விஜய் இன்று திருவள்ளூர் மாவட்டத்தில் பரப்புரை மேற்கொள்கிறார். இதனைத் தொடர்ந்து வில்லிவாக்கம், விருகம்பாக்கம் தொகுதியில் வாகனப்பேரணி மேற்கொண்டு வாக்கு சேகரிக்கிறார்.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான பரப்புரை நாளை மாலையுடன் ஓய்கிறது. தொகுதியில் தேர்தல் பணியாற்றும் வெளியூரைச் சேர்ந்தவர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

விஜய்- சங்கீதா விவாகரத்து வழக்கு இன்று செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் இருவரும் ஆஜராகவில்லை. ஜூன் 15ம் தேதிக்கு வழக்கை நீதிபதி ஒத்திவைத்தார்.

குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனுடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் சந்தித்து உரையாடினார். இலங்கையில் உள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த குடும்பத்தினருக்கு தேவையான உதவிகள் செய்ய கோரிக்கை விடுத்துள்ளார்.

செல்வப்பெருந்தைக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் தேர்தலுக்கான பணம் பதுக்கல் தொடர்பான புகாரின் கீழ் சோதனை நடத்தி வருகின்றனர். ராகுல் காந்தி இன்று தமிழ்நாடு வரும் நிலையில் உள்நோக்கத்தோடு தடுக்கப்பட்டிருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.1,14,400க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.60 குறைந்து ரூ.14,300க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு ஏப்ரல் 23ம் தேதி தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலா தலங்கள் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் வாக்களிக்கும் கடமையை நிறைவேற்ற வேண்டும் என நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் அருகே கட்டனார்பட்டி பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 25ஆக உயர்ந்துள்ளது. வெடிவிபத்தில் 21 பெண்கள், 4 ஆண்கள் என 25 பேர் உயிரிழந்தனர். 20 பேரின் உடல்களுக்கு உடற்கூராய்வு நிறைவு பெற்றுள்ளது.

டெல்லி மாநில முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மு.க.ஸ்டாலினுக்கு ஆதரவாக சென்னை கொளத்தூரில் இன்று பரப்புரை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் பதேபூரில் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் டீ குடித்த கடைக்கு உணவு பாதுகாப்பு துறையினர் எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து, டீக்கடைக்காரர் கடையை மூடுவதாக அறிவித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஞானசேகரனுக்கு நள்ளிரவில் திடீர் வலிப்பு ஏற்பட்டதால் அவர் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.