தஞ்சாவூர் அருகே 436 கிலோ குட்கா புகையிலைப் பொருட்கள் கடத்தல்... 4 பேர் கைது

1 hour ago 1
ARTICLE AD

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே 436 கிலோ குட்கா புகையிலைப் பொருட்களை கடத்தி வந்த நான்கு பேரை போலீசார் கைது செய்தனர் மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மினி லாரி, சொகுசுகார் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டது.

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை கடத்தி வந்த ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த இருவர் உள்பட நான்கு பேரை கைது செய்தும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மினி லாரி, சொகுசுகார் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

தஞ்சாவூர் அருகே புலவர்நத்தம் என்ற இடத்தில் தனியார் கல்லூரிக்கு பின்புறம் நேற்று முன்தினம் மாலை இரண்டு வாகனங்கள் சந்தேகத்துக்கிடமான வகையில் நின்று கொண்டிருந்தது. அப்போது அவ்வழியாக ரோந்துக்கு சென்ற அம்மாப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பெ.இனியவன் மற்றும் போலீஸார் அந்த வாகனங்களை சோதனை செய்தனர்.

அப்போது அந்த வாகனங்களில் தமிழகத்தில் தடை செய்யப்பட்ட ஹான்ஸ், உட்பட புகையிலை பொருட்கள் மூட்டை மூட்டையாக இருந்தது. இதில் இருந்த 436 கிலோ புகையிலைப் பொருட்களை போலீஸார் பறிமுதல் செய்தும், அங்கு வாகனத்தில் இருந்த பெங்களூரைச் சேர்ந்த கர்ணாராம்(46), சேலம் மாவட்டம் லெட்சுமணசமுத்திரத்தைச் சேர்ந்த தீபன்(38), ராஜஸ்தான் மாநிலம் பிஜப்புரா கிராமத்தைச் சேர்ந்த சங்காராம்(34), ராஜஸ்தான் மாநிலம் ஒட்டுவாலா கிராமத்தைச் சேர்ந்த வரஜங்கராம்(32) ஆகிய நான்கு பேரையும் கைது செய்து, அவர்கள் வந்த மினி லாரி மற்றும் சொகுசு கார் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

கள்ளச்சந்தையில் மதுபாட்டில் விற்றவர்கள் கைது

இதேபோல் தஞ்சாவூரில் கள்ளச் சந்தையில் மது பாட்டில்களை விற்ற தம்பதியினர், மனைவி கைது, கணவர் தலைமறைவானார். மேலும் 358 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதையடுத்து  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் உத்தரவின் பேரில், மதுவிலக்கு காவல்துறை துணை கண்காணிப்பாளர் இளங்கோ ஜென்னிஸ் வழிகாட்டுதலில்,  தஞ்சை மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார்  தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் தஞ்சை ரெட்டிபாளையம் ரோடு அன்னை சிவகாமி நகரில் யமுனா மற்றும் அவரது கணவர் செல்வமணி ஆகியோர் தேர்தலை முன்னிட்டு விடுமுறை வருவதால் முன்கூட்டியே சுமார் 358 பிராந்தி பாட்டில்களை அரசு உரிமம் இல்லாமல் வாங்கி பதுக்கி வைத்துக் கொண்டு அதிக விலைக்கு விற்பனை செய்ய வந்தது தெரிய வந்தது, மேலும் அவரது வீட்டை சுற்றியுள்ள வேறொருவர் தோட்டத்தில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து மதுவிலக்கு அமல் பிரிவு இன்ஸ்பெக்டர் ஆனந்திவேதவல்லி மற்றும் போலீசார் கந்தவேல், கோபி, மிருணாளினி, அமுதா,  ஆகிய குழுவினர் யமுனாவை கைது செய்து அவரிடமிருந்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்து, வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர், யமுனாவின் கணவர் செல்வமணி தலைமறைவாகி விட்டார், அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.  மேலும் பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டிலின் மதிப்பு சுமார் 50,000 ஆகும், இதனை கள்ளச் சந்தையில் விற்றால் சுமார் ஒரு லட்சம் வரை கிடைக்கும் என்பதால் தம்பதியினர் இந்த குற்ற செயலில் ஈடுபட்டது தெரிய வந்தது

Read Entire Article