வெளிநபர்களை அனுமதிக்க வேண்டாம்;கல்வி நிறுவங்களுக்கு உயர்கல்வித் துறை உத்தரவு!

11 months ago 7
ARTICLE AD

பல்கலைக்கழக வளாகத்தில் வெளி நபர்களை அனுமதிக்க கூடாது என உயர்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர், கல்லூரி வளாகத்திலேயே பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர், திமுக அமைச்சர், துணை முதலமைச்சர் உள்ளிட்டோருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின. இந்த விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட ஞானசேகரன் கைது செய்யப்பட்டார்.தல் தகவல் அறிக்கை, மாணவியின் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களுடன் வெளியானது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.

உயர்கல்வித் துறை உத்தரவு:

பல்கலைக்கழக வளாகங்களுக்குள் வரும் மாணவர்கள் கட்டாயம் அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும்; பாதுகாப்பு நடவடிக்கைகளில் கவனமாக இருக்க வேண்டும்; என அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் உயர்கல்வித் துறை செயலர் உத்தரவிட்டுள்ளார்.

சென்னை கிண்டியிலுள்ள அண்ணா பல்கலைக் கழகத்தில் நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தை 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்பு குழு விசாரணை செய்யும் என உத்தரவிட்டது.

இந்நிலையில், கல்வி நிறுவனங்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, தமிழ்நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று உயர் கல்வித்துறை செயலாளர் கோபால் உத்தரவிட்டுள்ளார். மேலும், கல்வி நிலையங்களுக்குள் வந்து செல்லும் வெளிநபர்கள், பணியாளர்கள் குறித்த பதிவு செய்து கட்டாயம் பராமரிக்க வேண்டும். வேலை நிமித்தமாக வரக்கூடிய எலக்ட்ரீசியன்கள், பிளம்பர்கள் உள்ளிட்டோரின் விவரங்களை தவறாமல் பதிவு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கல்வி நிறுவனங்களுக்கு சம்பந்தமில்லாத வெளி நபர்கள் நடமாட்டம் இருந்தால் உடனடியாக தெரிவிக்க வேண்டும். பயோமெட்ரிக் வருகை பதிவேடு முறையை அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் கடைப்பிடிக்க வேண்டும். கல்வி நிறுவனங்களில் புகார்கள் எழுந்தால் கடுமையான, விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Read Entire Article