திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி துவங்கப்பட்டு 75 ஆண்டுகள் ஆகிய நிலையில் அதற்கான பவள விழா கொண்டாட திட்டமிடப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கல்லூரி நிர்வாகமும் திருப்பத்தூர் நகர பொதுமக்கள் இணைந்து கல்லூரியின் 75 ஆவது ஆண்டு பவள விழாவை கொண்டாட திட்டமிட்டு அதை அடையாளப்படுத்தும் விதமாக டிசம்பர் 25ஆம் தேதி முதல் தொடர்ந்து நான்கு நாட்களுக்கு இந்தியாவிலேயே முதல்முறையாக ஆண்கள் மற்றும் பெண்கள் அணிக்கு முதல் பரிசு முதல் 6 லட்சம் ரூபாய், முதல் மூன்றாவது பரிசு இரண்டு லட்சம் வரை சம அளவு பரிசுத் தொகை வைத்து கபடி போட்டி நடத்த திட்டமிட்டுள்ளனர்.

இதுகுறித்து ஒருங்கிணைப்பாளர் எழில் செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில், “இந்தியா அளவில் புரோ கபடி போட்டி போல ஆண்கள் பிரிவில் 16 அணிகளும் பெண்கள் பிரிவில் 16 அணிகளும் என தலைசிறந்த அணிகளை வரவழைத்து போட்டியை நடத்த இருக்கிறோம். இதில் இந்தியாவில் உள்ள டாப் டீம்கள் கலந்து கொள்ள உள்ளன. நாளை முதல் 25 முதல் 28 வரை நான்கு நாட்கள் நடைபெற உள்ளது. மேலும் ஒரு நாளைக்கு ஐந்தாயிரம் பேர் கபடி போட்டியை கண்டு களிக்கும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. நான்கு நாட்களும் கபடி போட்டியில் முக்கிய தமிழக அமைச்சர்கள், அரசியல்வாதிகள் என முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ள உள்ளனர் ”எனத் தெரிவித்தார்.