Indian Army: மைனஸ் 30 டிகிரி.. உறைய வைக்கும் குளிர்.. இந்திய ராணுவம் செயல்படுவது எப்படி?

3 hours ago 1
ARTICLE AD

இந்தியா முழுவதும் குளிர் வாட்டி வதைத்து வருகிறது. இரவு 9 மணிக்கு மேல் யாரும் வீட்டை விட்டுக்கூட வெளியே செல்வதில்லை. அனைத்து ஜன்னல், கதவுகளும் மூடிக்கொண்டு, வீட்டுக்குள் உட்கார்ந்திருக்கோம். பேன், ஏசி எதுவும் பெரும்பாலும் இயக்கப்படுவதில்லை. இத்தனைக்கும் குளிர் பிளஸ் நிலையிலேயே இருக்கிறது.

பனி மூடிய இமயமலைப் பகுதிகளில் மைனஸ் 30 டிகிரி அளவில் குளிர் உள்ளது. லடாக், கார்கில், கால்வான், வடக்கு சிக்கிம், ஷம்ஷபரி மலைத்தொடர் மற்றும் கிரேட்டர் இமயமலைப் பகுதியில் வெப்பநிலை பூஜ்ஜியத்திற்கு கீழே குறைந்துள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. கடுமையான பனிப்பொழிவு, பனிக்காற்று, குறைந்த ஆக்ஸிஜன், தெளிவான பார்வை என எதுவும் இல்லாமல் சவாலாக இருக்கும் நிலையில் நாட்டின் எல்லைகளைக் காக்கும் வீரர்கள் விழிப்புடன் எப்படி செயல்படுகிறார்கள் என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். குளிர், வெயில் என எந்த காலக்கட்டமானாலும் இந்திய ராணுவத்தின் உற்சாகம் குறையாமல் இருப்பது எப்படி சாத்தியமாகிறது என்பதைக் காணலாம்.

இந்தியாவைப் பொறுத்தவரை சில பகுதிகள் ஆண்டுதோறும் ஒரே பருவநிலையை கொண்டிருக்கும். அந்த நிலையில் உலகின் மிக உயரமான போர்க்களமான சியாச்சின் பனிப்பாறை உள்ளிட்ட குளிர் பகுதிகளில் இராணுவம் சிறப்புடன் செயலாற்ற சரியான குளிர்கால உடைகள், அதிக உயர உபகரணங்கள், துல்லியமான வானிலை கண்காணிப்பு அமைப்புகள் ஆகியவைகளோடு சிறப்பு பயிற்சியும் அளிக்கப்படுகிறது.

குறைந்த ஆக்ஸிஜன் மற்றும் கடுமையான குளிரில் செயல்படுவது நிச்சயம் ராணுவ வீரர்களுக்கு உடல் ரீதியாக மட்டுமல்லாமல் மன ரீதியாக பிரச்னையை உண்டாக்கும். இதை வீரர்கள் ஒழுக்கம் மற்றும் கடமை உணர்வால் சரி செய்கின்றனர். இதில் சியாச்சினில் வீரர்கள் மூன்று அடுக்குகளைக் கொண்ட சிறப்பு குளிர் காலநிலை ஆடை அமைப்பை அணிந்து கொள்கிறார்கள். இது கடுமையான குளிர், அதிக காற்று மற்றும் பனியிலிருந்து வீரர்களைப் பாதுகாக்கிறது.

வீரர்கள் தங்கியிருக்கும் இடத்தில் அறை வெப்பநிலை நீர் சில நிமிடங்களில் பனிக்கட்டியாக மாறி விடுகிறது. மேலும்  உறைந்த உணவு வகைகளை சமைப்பது ஒரு சவாலாக மாறியுள்ளது. உறைந்த உணவுப் பொருட்களை வீரர்கள் சுத்தியலால் பலமுறை அடித்து நொறுக்கும் வீடியோவும் சமீபத்தில் வைரலானது

லடாக் மற்றும் கார்கில் பகுதிகளில் தற்போது  பகல்நேர வெப்பநிலை மைனஸ் 7 முதல் மைனஸ் 10 டிகிரி செல்சியஸ் வரை இருக்கிறது. இரவில் மைனஸ் 15 டிகிரி வரை செல்கிறது. ராணுவ வீரர்கள்  மூடுபனியில் ரோந்து செல்வது மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளது. மாற்று வழிகள் மற்றும் உறுதியான உடல், மனநிலையால் ராணுவம் எதிர்கள் நம் நாட்டுக்குள் அண்ட விடாதபடி கண்ணின் இமையாக இருந்து பாதுகாப்பை உறுதி செய்கிறார்கள்.

Read Entire Article