பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று கானா அதிபர் ஜான் டிராமணி மகாமா, அந்நாட்டின் உயரிய விருதான 'ஆபீசர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி ஸ்டார்' என்ற விருதை வழங்கினார். கடந்த 2014ஆம் ஆண்டு, பிரதமராக பதவி ஏற்றியதிலிருந்து மோடிக்கு பல சர்வதேச விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. தற்போது, கானா நாட்டின் விருதினை பெறுவதன் மூலம் 24ஆவது சர்வதேச விருதுக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார் பிரதமர் மோடி.

வீட்டில் விருது வைக்க கூட இடம் இல்ல:

140 கோடி இந்தியர்களின் சார்பாக இந்த விருதை ஏற்றுக்கொண்ட பிரதமர், இந்த விருதை இந்திய இளைஞர்களின் விருப்பங்களுக்கும், அதன் கலாச்சார மரபுகள், பன்முகத்தன்மைக்கும், கானாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான வரலாற்று உறவுகளுக்கும் அர்ப்பணிப்பதாக கூறினார்.

பிரதமர் மோடிக்கு இத்தனை நாடுகள் விருது வழங்கி இருக்கா?

இந்த சிறப்புமிக்க விருதை வழங்கிய கானா மக்களுக்கும் அரசுக்கும் பிரதமர் நன்றி தெரிவித்தார். இது, இரு நாடுகளின் பொதுவான ஜனநாயக விழுமியங்கள் மற்றும் மரபுகளிடையேயான ஒற்றுமையை தொடர்ந்து மேம்படுத்தும் என்று குறிப்பிட்ட பிரதமர், இந்த விருது இரு நாடுகளுக்கும் இடையிலான நட்பை மேலும் ஆழப்படுத்துவதாகவும், இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கான புதிய பொறுப்பை தமக்கு வழங்குவதாகவும் கூறினார். கானாவிற்கான தமது வரலாற்று சிறப்புமிக்க அரசுமுறைப் பயணம் இந்தியா - கானா உறவுகளுக்கு ஒரு புதிய உத்வேகத்தை அளிக்கும் என்றும் பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.

பிரதமர் மோடி பெற்ற மற்ற விருதுகள்:

கம்பேனியன் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் லோகோ:

பசிபிக் தீவு நாடுகளின் ஒற்றுமைக்காக உழைத்ததற்காகவும், உலகளாவிய தெற்கின் பிரச்னைகளை முன்னெடுத்துச் சென்றதற்காகவும் மிக உயர்ந்த குடிமகன் விருதை பப்புவா நியூ கினியா வழங்கியது.

கம்பேனியன் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் பிஜி:

கடந்த 2023ஆம் ஆண்டு, மே மாதம், பிரதமர் மோடியின் உலகளாவிய தலைமையை அங்கீகரித்து பிஜியின் உயரிய விருது வழங்கப்பட்டது.

பலாவ் குடியரசின் எபகல் விருது:

கடந்த 2023ஆம் ஆண்டு, மே மாதம், பப்புவா நியூ கினியாவிற்கு பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடிக்கு எபகல் விருதை அந்நாட்டு ஜனாதிபதி சுராங்கல் எஸ். விப்ஸ் ஜூனியர் வழங்கினார்.

ஆர்டர் ஆஃப் தி ட்ரூக் கியால்போ:

கடந்த 2021ஆம் ஆண்டு, டிசம்பரில் பிரதமர் மோடிக்கு மிக உயர்ந்த விருதான ஆர்டர் ஆஃப் ட்ருக் கியால்போவை பூடான் வழங்கி கௌரவித்தது.

அமெரிக்க அரசு வழங்கிய லெஜியன் ஆஃப் தி மெரிட்:

சிறப்பான சேவை புரிந்ததற்காகவும் சாதனைகளை படைத்ததற்காகவும் அமெரிக்க பாதுகாப்பு படை இந்த விருதை வழங்கி வருகிறது. கடந்த 2020ஆம் ஆண்டு, பிரதமர் மோடிக்கு இந்த விருது வழங்கப்பட்டது.