பொங்கல் பண்டிகைக்கு பிறகு தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்பாடு திருப்புமுனையை உண்டாக்கும் என அக்கட்சியின் நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணாசாலையில் உள்ள பிஎஸ்என்எல் அலுவலகத்தில் திடீர் தீ விபத்து - அப்பகுதியில் இன்டர்நெட், செல்போன் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை புத்தகக் கண்காட்சி ஜனவரி 8ம் தேதி தொடங்குவதாக பபாசி அறிவித்துள்ளது. இந்த புத்தக கண்காட்சியில் 6 எழுத்தாளர்களுக்கு கலைஞர் பொற்கிழி விருதை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கவுள்ளார்.

தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களிலும் வழக்கத்தை விட குளிர் அதிகமாக காணப்படுவதால் மக்கள் அவதியடைந்துள்ளனர். இதனால் விமானப் போக்குவரத்து, ரயில் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

2 நாட்கள் பயணமாக திருநெல்வேலி செல்லும் முதலமைச்சர் ஸ்டாலின் அங்கு பொருநை அருங்காட்சியத்தை திறந்து வைக்கிறார்.

திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் டயர் வெடித்து தாறுமாறாக ஓடிய கார் அடுத்தடுத்து வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளனாது. இதில் 3 கார்கள், 2 லாரிகள் அடுத்த‌டுத்து மோதிய தொடர் விபத்தில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

தமிழருவி மணியனின் காமராஜர் மக்கள் கட்சியானது ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இணைகிறது. ஈரோட்டில் உள்ள ஸ்ரீ லட்சுமி துரசாமி மஹாலில் இந்த விழா நடக்கிறது.

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.99,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ரூ.226க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் மீண்டும் சேர்க்க விரும்புபவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரபல மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் உடல்நலக்குறைவால் காலமானார். அவரின் மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

அசாம், மாலிகான் பகுதியில் தண்டவாளத்தை கடக்க முயன்ற யானைகள் மீது ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயில் மோதி விபத்துக்குள்ளானதில் 7 யானைகள் பலியானது.

சூதாட்ட செயலி வழக்கில் சிக்கிய முன்னாள் கிரிக்கெட் வீரர்களான யுவராஜ், உத்தப்பா, நடிகர் சோனு சூட், நடிகை ஊர்வசி ரவுடேலா ஆகியோரின் ரூ.7.93 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கி அமலாகத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி 3-1 என்ற கணக்கில் வென்றது. இதன்மூலம் சொந்த மண்ணில் தொடர்ச்சியாக அதிக தொடர்களை வென்ற அணி என்ற பெருமையைப் பெற்றுள்ளது.

வங்கதேசத்தில் நடைபெற்ற வன்முறையில் இம்தாதுல் ஹக் மிலோன் என்ற பத்திரிக்கையால் உயிரிழப்பு - இந்து இளைஞர் ஒருவரை கொன்று உடலை கம்பத்தில் தொங்கவிட்டு உடலை எரித்த கலவரக்காரர்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

காஸாவில் இஸ்ரேல் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலில் இருவர் உயிரிழந்ததால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.