இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியங்களுங்கு இடையே தடையில்லா வார்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதன் மூலம் எந்தெந்த பொருள்களின் விலை குறையவுள்ளது என்பதை காண்போம்.

மிகப்பெரிய பொருளாதார மாற்றம்:

வணிக அமைச்சகச் செயலாளர் ராஜேஷ் அகர்வால், "அனைத்து ஒப்பந்தங்களின் தாய்" (mother of all deals) என்று அடிக்கடி வர்ணிக்கப்படும் இந்த ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்த ஒப்பந்தம் இப்போது கையெழுத்தானாலும், இது 2027 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது இந்திய நுகர்வோருக்கும் வணிகங்களுக்கும் மிகப் பெரிய மாற்றங்களைக் கொண்டு வரும்.

எந்தெந்த பொருள்களின் விலை குறையும்?

மெர்சிடிஸ், பிஎம்டபிள்யூ மற்றும் ஆடி போன்ற ஐரோப்பிய சொகுசு கார்கள்

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்கள்

இங்கிலாந்து மற்றும் அயர்லாந்திலிருந்து ஸ்காட்ச் விஸ்கி, ஓட்கா மற்றும் ஜின்

பெல்ஜியத்தின் ஆண்ட்வெர்ப்பிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட வைரங்கள்
இறக்குமதி செய்யப்பட்ட வைரங்களால் செய்யப்பட்ட நகைகள்

சுவிட்சர்லாந்து, லக்சம்பர்க் மற்றும் நெதர்லாந்திலிருந்து பிரீமியம் ஐரோப்பிய சாக்லேட்டுகள்