Tvk Government ; 5 வருடம் இந்த ஆட்சி நீடிக்காது... திண்டுக்கல் சீனிவாசன் ஆரூடம் !

1 hour ago 1
ARTICLE AD

மதுரையில் உள்ள வங்கியில் அதிமுக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருமகனார் நினைவிட பொறுப்பாளர் காந்தி மீனா ஆகியோர் வங்கியில் தங்க கவசத்தை ஒப்படைத்தனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய திண்டுக்கல் சீனிவாசன்...," மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் இடைத்தேர்தலுக்கு அனைவரும் தயாராக வேண்டும் இடைத்தேர்தலில் வெற்றி பெற பாடுபட வேண்டும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது. பொதுக்குழு எப்போதும் போல தான் நடந்தது; எந்த பிரச்சனையும் இல்லை.

கட்சியை ஒருங்கிணைக்க வாய்ப்பா?

கட்சியில் 3 பேர் வெளியில் சென்றதால் எந்த ஆபத்தும் இல்லை. அதனை மதுராந்தம் தாராபுரம் தேர்தல் நிருபித்துள்ளது.

இடைத்தேர்தல் உள்ள தொகுதிகளுக்கு முதலமைச்சர் செல்வது குறித்த கேள்விக்கு?

முதலமைச்சர் விஜய் 100 கி.மீ ரோட்ஷோ போனாலும் இடைத்தேர்தலில்  வெற்றி கிடைக்காது; இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு வெற்றி கிடைக்கும்;  1 பைசா பணம் கொடுக்காமல் வெற்றி என்றனர். தாராபுரம், மதுராந்தகத்தில் 500 ரூபாய் கொடுத்து வெற்றிபெற்றார்கள். தவெக கடந்த முறை வாங்கியதை விட வாக்குசதவிகிதம் குறைவு கூட்டணியால் கிடைத்த வெற்றி தான். விலைவாசி உயர்வை பாருங்கள் 6 மாதத்தில் பிரமாதமாக செய்வேன் என்றார் அரிசி விலையேற்றத்தால் மக்கள் நொந்துபோய் உள்ளனர்.; எந்த நன்மைகளும் இந்த ஆட்சியில் இல்லை.

அம்பாசமுத்திரம் பொதுவேட்பாளாராக சீமான் அறிவிக்க வாய்ப்பா? என்ற கேள்விக்கு?

திமுக போன்ற நிலைப்பாடு, தான் அதிமுகவும் தேர்தல் வந்த பின்பு அது குறித்து பேசுவோம்,

கொடாநாடு கொள்ளை வழக்கு குறித்த கேள்விக்கு?

கொடநாடு 5 ஆண்டுகளாக திமுக பேசிக்கொண்டிருந்தார்கள் ; கொடநாடு விவகாரத்தில் யார் உண்மையான குற்றவாளியோ நடவடிக்கை எடுக்கட்டும். இதைவிட அவமானம் கேவலம் தமிழகத்திற்கு எதுவும் ஏற்படாது ;  துணை குடியரசுத்தலைவர் வருகிறார் என்றார் இதையெல்லாம் ஏற்பாடு செய்ய வேண்டும் நிர்வாக திறமை இல்லை. விஜய் சென்றார் என்றால் 10கி.மீட்டருக்கு மின்தடை ஏற்படுத்தி மின்சாரம் விநியோகிக்கிறார்கள்; ஆனால் துணை குடியரசு தலைவர் வரும்போது முறையாக செய்யவில்லை அதனை பொறுப்போடு செய்ய வேண்டும்.

ஆளுங்கட்சிக்கு எதிராக 65% உள்ளது அதனை ஒன்று சேர்த்தால் தானே வெற்றி பெற முடியும் என்ற கேள்விக்கு?

இதையெல்லாம் எல்லோரும் சேர்ப்பது வியூகம் வகிக்கிறது தேர்தல் அறிவிப்பிற்கு பின் வரும். ஆளுங்கட்சிக்கு 35% உள்ளது. 65% எதிர்ப்பில் உள்ளவைகளை என்ன செய்தால் வெற்றிபெற முடியும் என பொதுச்செயலாளர் முடிவு பண்ணுவார் செய்வார். 65% சதவிகித உள்ள கட்சி சேர்ந்து தான் சாத்தியம் ஆகும். எல்லோரும் சேர்ந்து தான் வியூகம் அமைக்கனும் சொல்றேன்  எங்க கட்சி தலைவர் தேர்தல் அறிவிப்பில் இருந்து யோசனை செய்து சொல்லிவிடுவார். தாராபுரம், மதுராந்தகத்தில் டிபன் பாக்சில் 500 ரூபாய் கொடுத்துளளனர்.

விஜய் தான் 15 ஆண்டு காலத்துக்கு முதலமைச்சர் என அமைச்சர்கள் பேசுவது குறித்த கேள்விக்கு

அப்படி பகல்கனவு காண்கிறார்கள் நிச்சயம் அது நடக்காது , விலைவாசி உயர்வு,  மின் தட்டுப்பாடு, சட்ட ஒழுங்கு பிரச்சனையால் மக்கள் கொதித்து போயுள்ளனர். 5 வருடம் இந்த ஆட்சி வரவே வராது நீடிக்காது, இன்னும் 6்மாதத்தில் பாருங்கள் எல்லாமே தெரியும்

திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரத்தில் அதிமுகவின் நிலைப்பாடு குறித்த கேள்விக்கு?

நீதிமன்றத்தின் தீர்ப்பு தான் எங்களின் நிலைப்பாடு

திமுகவில் கட்சி பதவி சீரமைப்பு போன்று அதிமுகவில் நடைபெறுமா?

கட்டமைப்புடன் உள்ள கட்சி திமுகவும், அதிமுகவும் தான் : அதிமுக தொடர்ந்து சிறப்பாக பணியாற்றி வெற்றி வாய்ப்பை பெறுவோம்

அதிமுக போராட்டங்களை முன்னெடுக்க தயங்குவது ஏன்?

ஆளுங்கட்சிக்கு பொதுமக்கள் 6 மாதங்கள் கால அவகாசம் கொடுங்கள் என்றனர். அதனால் டைம் கொடுத்தோம், இனி தொடர்ந்து ஆர்ப்பாட்டம் போராட்டம் தான்.

Read Entire Article