விவசாயிகளின் உழைப்பு வீணாகாது; பொதுமக்களுக்கு அரிசி தட்டுப்பாடு வராது – அமைச்சர் அதிரடி!

3 months ago 6
ARTICLE AD

மயிலாடுதுறை: உலகளாவிய காலநிலை மாற்றமான ‘எல்நினோ’ தாக்கம் காரணமாக எதிர்காலத்தில் உணவுத் தட்டுப்பாடு ஏதும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக, டெல்டா மாவட்டங்களில் கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை உடனுக்குடன் பிற மாவட்டங்களுக்கு அரவைக்கு அனுப்பி, பொதுமக்களுக்கு தடையின்றி அரிசி விநியோகம் செய்ய போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழக உணவுத்துறை அமைச்சர் வெங்கடரமணன் தெரிவித்துள்ளார். மயிலாடுதுறையில் உள்ள ஆதிதிராவிடர் நலத்துறை மாணவியர் விடுதியில் இன்று (சனிக்கிழமை) திடீர் ஆய்வு மேற்கொண்ட பின், செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவர் இதனைத் தெரிவித்தார்.

மாணவியர் விடுதியில் திடீர் ஆய்வு

முன்னதாக, மயிலாடுதுறை நகரில் அமைந்துள்ள ஆதிதிராவிடர் நலத்துறை மாணவியர் விடுதிக்கு நேரில் சென்ற அமைச்சர் வெங்கடரமணன், அங்குள்ள உள்கட்டமைப்பு வசதிகள், மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் மற்றும் தங்கும் அறைகளின் தூய்மை குறித்து விரிவான ஆய்வு நடத்தினார். தொடர்ந்து, விடுதி மாணவிகளுடன் நேரடியாகக் கலந்துரையாடி, அவர்களின் அத்தியாவசியத் தேவைகள் மற்றும் குறைகளைக் கேட்டறிந்தார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் பேசியதாவது

"தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் நலத்துறை மாணவ, மாணவிகள் தங்கும் விடுதிகளில் தடையற்ற உள்கட்டமைப்பு வசதிகளை உறுதி செய்ய வேண்டும் என்று முதலமைச்சர்  உத்திரவிட்டுள்ளார். அதனடிப்படையில் இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. விடுதிகளில் தூய்மைப் பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதோடு, மாணவிகளின் உடல்நலனை மேம்படுத்தும் வகையில் தேவைப்படும் விடுதி வளாகங்களில் விளையாட்டு மைதானங்கள் தங்கு தடையின்றி ஏற்படுத்தித் தரப்படும்." என்றார்.

எல்நினோ சவால்: நெல் கொள்முதல் மற்றும் விநியோகப் பெருந்திட்டம்

தொடர்ந்து, எல்நினோ பருவநிலை மாற்றத்தால் ஏற்படக்கூடிய சவால்கள் மற்றும் உணவுப் பாதுகாப்பு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அமைச்சர்;

வகை வாரியான அரவைத் திட்டம்: "எல்நினோ காரணமாக உலகளவில் பருவ கால மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. இதனால் தமிழகத்தில் எந்தவொரு உணவுத் தட்டுப்பாடும், குறிப்பாக அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் அரசு விழிப்புடன் உள்ளது.

டெல்டா மாவட்டங்களில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் தேக்கமடையாமல், தமிழகத்தின் பிற மாவட்டங்களில் உள்ள அரவை ஆலைகளுக்கு (Modern Rice Mills) உடனடியாக அனுப்பி வைக்கப்படும்.

அரிசி விநியோகம்: அவ்வாறு அரைக்கப்படும் அரிசி, அந்தந்த மாவட்டங்களிலேயே பொது விநியோகத் திட்டத்தின் (ரேஷன் கடைகள்) மூலம் பொதுமக்களுக்கு உடனுக்குடன் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அரவை ஆலைகள் இல்லாத மாவட்டங்கள்: சொந்தமாக நவீன அரவை ஆலைகள் இல்லாத மாவட்டங்களாக இருந்தால், அதற்கு அருகில் உள்ள அண்டை மாவட்டங்களுக்கு நெல் மூட்டைகள் அனுப்பப்பட்டு, அங்கு அரவை செய்யப்பட்டு விநியோகம் தடையின்றி உறுதி செய்யப்படும்."

தேக்கமடைந்துள்ள நெல் மூட்டைகள் விரைந்து இயக்கம்

கடந்த குறுவை மற்றும் சம்பா சாகுபடி காலங்களில் கொள்முதல் செய்யப்பட்டு, சேமிப்புக் கிடங்குகளில் தேக்கமடைந்துள்ள நெல் மூட்டைகள் குறித்துப் பேசிய அமைச்சர், "விவசாயிகளிடமிருந்து பெறப்பட்டு தற்சமயம் இருப்பிலுள்ள அனைத்து நெல் மூட்டைகளும் இன்னும் சில தினங்களில் முழுமையாக அரவைக்கு அனுப்பி வைக்கப்படும். இதன் மூலம் புதிய நெல் கொள்முதலுக்கான இடவசதியும் தாராளமாக விஸ்தரிக்கப்படும்," என்றார்.

ரயில்வே நிலங்களில் தற்காலிக சேமிப்புக் கிடங்குகள்!

நெல் மூட்டைகளைப் பாதுகாப்பாக வைப்பதில் உள்ள இடநெருக்கடி மற்றும் சேமிப்புக் கிடங்குகள் பற்றாக்குறையைச் சமாளிக்க அரசு எடுத்து வரும் புதிய உத்தி குறித்தும் அமைச்சர் விளக்கினார். "நிரந்தர சேமிப்புக் கிடங்குகளின் பற்றாக்குறையைத் தற்காலிகமாகச் சமாளிக்க, ரயில்வே துறைக்குச் சொந்தமான காலியாக உள்ள பெருமளவிலான நிலங்களைப் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளோம்.

இதற்காக ரயில்வே நிர்வாகத்துடன் இணைந்து தற்காலிக சேமிப்புக் கிடங்குகளை (Temporary Storage Godowns) அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தப் பணிகள் தற்போது மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த ஒப்பந்தம் இறுதியானதும், திறந்தவெளியில் நெல் மூட்டைகள் நனைந்து பாழாவது முற்றிலுமாகத் தடுக்கப்படும்," என்று அமைச்சர் வெங்கடரமணன் உறுதியளித்தார். அமைச்சரின் இந்த அதிரடி அறிவிப்புகள் டெல்டா பகுதி விவசாயிகளிடையேயும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

Read Entire Article