திருப்பத்தூர் எம்எல்ஏ திருப்பதி ஆடு, மாடு, நாட்களுக்கு மருத்துவம் பார்த்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இதைப் பார்த்து இப்படி ஒரு எம்எல்ஏவா என்று பொதுமக்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த மாடப்பள்ளி பகுதியைச் சேர்ந்த திருப்பதி கால்நடை மருத்துவர். இவர் சுமார் 20 ஆண்டு காலமாக அதிமுக கட்சியில் பயணித்து வந்தார். 68 வயதான இவருக்கு அதிமுகவில் சட்டமன்ற உறுப்பினராக போட்டியிட வாய்ப்பு கிடைக்காத காரணத்தால், அந்தக்கட்சியில் இருந்து வெளியேறி தமிழக வெற்றி கழகத்தில் இணைந்து ஒரே நாளில் சீட்டு வாங்கி வந்து சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று எம்எல்ஏவானார்.

மேலும், திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியில் பல்வேறு நல்ல திட்டங்களையும் கொண்டு வந்து பொதுமக்களின் நற்பெயரையும் சம்பாதித்து வைத்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று அவருடைய கால்நடை மருத்துவமனைக்கு நாய் மற்றும் மாடுகள் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அழைத்து வந்தனர். அப்போது சற்றும் யோசிக்காமல் மாட்டின் ஆசனவாயில் கையை செலுத்தி மருத்துவம் பார்த்தார். அதேபோல நாய்க்கும் கட்டு கட்டியும் விட்டார். பல்வேறு மக்கள் பணிகளை மேற்கொண்டு வரும் எம்எல்ஏ கால்நடைகளைப் பற்றி கவலை கொண்டு மருத்துவம் பார்க்கும் சட்டமன்ற உறுப்பினர் திருப்பதிக்கு பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்தனர். மேலும் இதன் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது.