இனி இப்படி நடக்காது.. மன்னிப்பு கேட்ட அமைச்சர்.. நடந்தது என்ன?

1 hour ago 1
ARTICLE AD

கால்நடை துறை உதவி மருத்துவர் நபர் ஒருவரை ஆபாசமாக பேசிய வீடியோ வைரலானதை அடுத்து சங்கரநாராயணன் பணியிடம் நீக்கம் செய்யப்பட்ட நிலையில் இந்த சம்பவத்திற்கு அமைச்சர் மன்னிப்பு கேட்டுள்ளார்.

கொலை மிரட்டல்

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் வட்டம் கூனிமேடு பகுதியில் உள்ள கால்நடை துறை மருந்தகம் உதவி மருத்துவராக சங்கரநாராயணன் பணியாற்றி வருகிறார். அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் உடல்நிலை சரியில்லாத பசுமாட்டை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு வந்துள்ளார். அப்போது பணியில் இருந்த சங்கரநாராயணனிடம் பசுவுக்கு சிகிச்சை அளிக்குமாறு இளைஞர் கூறியுள்ளார். அதற்கு சங்கரநாராயணன் தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார். அதுமட்டுமல்லாமல் தட்டிக்கேட்டதால் அந்த நபருக்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுதொடர்பான வீடியோ வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சஸ்பெண்ட்

இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் கால்நடைத்துறை அமைச்சர் கமலி செய்தியாளர்களை சந்திக்கையில்: பாதிக்கப்பட்ட நபர் தனிப்பட்ட முறையில் வீடியோ அனுப்பியதாகவும், அந்த வீடியோவை கொண்டு தான் நடந்த சம்பவம் உண்மைதான என விசாரணை மேற்கொண்டேன். விசாரணையில் அவர் பேசியது உண்மை என தெரிய வந்த நிலையில் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என நேற்று அவரை சஸ்பெண்ட் செய்ய உத்தரவிட்டுள்ளேன் என்றார்.

மன்னிப்பு கேட்ட அமைச்சர்

உதவி மருத்துவர் சங்கரநாராயணன் அந்த நபரை பேசியதற்காக, தான் அந்த துறை சார்ந்த அமைச்சர் பொறுப்பில் இருப்பதால் உண்மையிலே மன்னிப்பு கேட்பதாக கூறினார். மேலும் இது போன்ற சம்பவம் மீண்டும் நடைபெறாது, அனைத்து மருத்துவர்களிடம் பணிவாக நடக்க சொல்லி இருப்பதாக தெரிவித்தார்.

Read Entire Article