விஜய்கிட்ட சொல்லட்டா.. பணம் கேட்ட காவலரை மிரட்டிய வடமாநில லாரி ஓட்டுநர்!

3 months ago 6
ARTICLE AD

ஓசூர் அருகே காவல் அதிகாரி ஒருவர் பணம் கேட்ட நிலையில் முதலமைச்சர் விஜயிடம் சொல்லட்டுமா என வடமாநில லாரி ஓட்டுநர் ஒருவர் பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தவெக அரசில் நிகழ்ந்த மாற்றம்

2026 சட்டமன்ற தேர்தலில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்து தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றது. முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வரும் நிலையில் நேர்மையான, லஞ்சம் ஊழல் இல்லாத அரசை தர வேண்டும் என செயல்பட்டு வருகிறார். தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு அரசு அலுவலகங்களில் பணிகள் லஞ்சம் இல்லாமல் உடனுக்குடன் முடித்துக் கொடுக்கப்படுவதாகவும், தங்களை நாடி வருபவர்களை அதிகாரிகள் மதித்து நடப்பதாகவும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

North Indian truck driver used just name of @TVKVijayHQ to stop this Police from taking bribe 🙏🙏

Driver : Take a photo, Vijay Thalapathy ji.

Driver : Look, our container is empty, there isn't even a seal on it...

Police Officer : Hey, let me check it first. Where is the… pic.twitter.com/UabFQjR7Hn
— Iʀsʜᴀᴅ (@irshad5005) July 21, 2026

லஞ்சம் கொடுக்காதீங்க மக்களே

இதனிடையே கரூரில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் விஜய், பொதுமக்களிடம் எதற்காகவும் லஞ்சம் கொடுக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டார். அப்படியே யாராவது கேட்டால் இது உங்கள் மகன், சகோதரன் ஆட்சி என தைரியமாக சொல்லுங்கள். அரசு அதிகாரிகள் யாராவது லஞ்சம் கேட்டால் தைரியமாக  கொடுக்க முடியாது  என சொல்லுங்கள் என்றும், இந்த விஷயத்தில் மக்கள் பக்கம் அரசு நிற்கும் எனவும் தெரிவித்தார். இது மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.

அதுமட்டுமல்லாமல் அதுமட்டுமல்லாமல் தமிழ்நாடு அரசு அரசு ஊழியர்கள் லஞ்சம் கேட்டால் 94981 80936 என்ற வாட்ஸ் அப் எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என அறிவித்தது. மேலும்,  [email protected] என்ற மின்னஞ்சல் முகவரி மூலமும், 'ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்கம், எண் 293, எம்.கே.என்.தெரு, ஆலந்துார், சென்னை 600 016' என்ற முகவரிக்கும் புகார் தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. 044-22321090, 044-22321080 என்ற தொலைபேசி வாயிலாக புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைரலாகும் வீடியோ

ஆனால் ஆங்காங்கே பொதுமக்களிடம் அரசு ஊழியர்கள் லஞ்சம் கேட்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி உடனடியாக துறை ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இந்த நிலையில் ஒசூர் சிப்காட் அருகே எடுத்ததாக சொல்லப்படும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. அதில் வடமாநில லாரி ஓட்டுநர் ஒருவரிடம் அபராதம் வசூலிக்கும் மிஷினுடன் இருக்கும் காவலர் பேசுகிறார்.

ஆனால் வடமாநில லாரி ஓட்டுநர் அந்த காவலரை தனது போனில் வீடியோ எடுப்பதுடன், என் லாரியின் கண்டெய்னர் காலியாக இருக்கிறது. அதில் சீல் கூட இல்லை என சொல்கிறார். ஆனால் இந்த காவலர் அபராதம் விதிக்கும் வகையில் பணம் கேட்கிறார் என தெரிவிக்கிறார். உடனே அந்த காவலர் பில் எங்கே என கேட்கிறார். அதற்கு அந்த லாரி ஓட்டுநர் தளபதி விஜய் நம்பர் என்னிடம் இருக்கிறது. நான் இதை அவருக்கு அனுப்பி புகாரளிக்கிறேன் என சொல்கிறார். இதனைக் கேட்டு திகைத்த அந்த காவலர், நான் சும்மா செக் பண்ணத்தான் என கேட்டேன் என தெரிவிக்கிறார். இதனை தவெகவினர் அதிகளவில் ஷேர் செய்து வருகின்றனர். விஜயின் புகழ் வடமாநிலம் வரை பரவி விருப்பதாக ஃபயர் எமோஜிக்களை சமூக வலைத்தளங்களில் தெறிக்க விட்டுள்ளனர்.

Read Entire Article