புதிய எம்எல்ஏக்கள் பதவியேற்பு

தமிழக சட்டமன்ற தேர்தலில் தவெக ஆட்சியை கைப்பற்றிய நிலையில், நேற்று தமிழக முதலமைச்சராக விஜய் பதவியேற்றுக்கொண்டார். இதனையடுத்து தற்காலிக சபாநாயகராக கருப்பையாவிற்கு ஆளுநர் பதவி பிரமானம் செய்து வைத்த நிலையில், இன்று புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் பதவியேற்கவுள்ளனர். அந்த வகையில் சட்டசபையில் அலுவல்களை தற்காலிக சபாநாயகர் ஏற்று நடத்துவதற்கு முன், அதற்குரிய உறுதிமொழியை அவர் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

உதயநிதியை தொடர்ந்து இபிஎஸ் பதவியேற்பு

முதலில், முதலமைச்சர் விஜய் அடுத்ததாக 9 அமைச்சர்கள், இதனை தொடர்ந்து சட்டசபை கட்சித் தலைவர்கள் உதயநிதி, எடப்பாடி பழனிசாமி, அடுத்து, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், முன்னாள் அமைச்சர்கள், அரசு தலைமை கொறடா ஆகியோர் பதவியேற்பார்கள். அடுத்ததாக தமிழ் அகர வரிசைப்படி உறுப்பினர்கள் பதவி பிரமாணம் அல்லது உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும்.

நேருக்கு நேர் சந்திப்பு

அந்த வகையில் இன்று காலை சட்டசபை அரங்கத்திற்கு வந்த முதலைச்சர் விஜய்யும், எதிர்கட்சி தலைவர் உதயநிதியும் நேருக்கு நேர் சந்தித்துக்கொண்டர். ஆனால் எதுவும் பேசவில்லை. இருவரும் ஒருவர் முகத்தை பார்க்க கூடாத என்ற வகையில் தவிர்த்துக்கொண்டர்.