'கூகுள் பண்ணி பாருடா தற்குறி' .. தவெகவினரை விளாசிய எம்.எல்.அப்துல்லா.. நடந்தது என்ன?

1 hour ago 1
ARTICLE AD

திமுக தேர்தல் வெற்றி குறித்து தான் பேசியதை திரித்து பரப்பும் தமிழக வெற்றிக் கழகத்தை திமுக முன்னாள் எம்.பி., எம்.எம். அப்துல்லா சரமாரியாக சாடியுள்ளார்.

முஸ்லீம் லீக்கை வெளுத்து வாங்கிய அப்துல்லா

2026 சட்டமன்ற தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் திமுக கூட்டணியில் இடம்பெற்று 2 இடங்களை வென்றது. தேர்தலுக்குப் பின்னர் தவெகவுக்கு ஆதரவு தேவைப்பட்ட நிலையில் திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி ஆதரவு கொடுத்தது. அதுமட்டுமல்லாமல் அக்கட்சியின் எம்.எல்.ஏ., ஷாஜகான், சிறும்பான்மை நலத்துறை அமைச்சராகவும் பொறுப்பேற்றுள்ளார். அவர் தலைமைச்செயலக அறையில் பொறுப்பேற்றபோது அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தனது வாழ்த்துகளை தெரிவித்தார். அப்போது இந்திய யூனியன் முஸ்லீம் லீக்   தலைவர் காதர் மொய்தீன் ஆதவ் அர்ஜூனாவிடம், உங்களுக்கு தான் வாழ்த்து சொல்ல வேண்டும். இது நூற்றாண்டு கனவு என தெரிவித்தார்.

இந்த நிகழ்வு திமுக தலைமையை மேலும் சூடாக்கியுள்ளது. நேற்றைய தினம் செய்தியாளர்களை திமுக முன்னாள் எம்.பி., எம்.எம். அப்துல்லா சந்தித்தார். அப்போது,  இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியை சரமாரியாக விமர்சித்தார். தேர்தலுக்கு முன்பே விஜய் அதிகாரத்தில் பங்கு தருகிறோம் என சொன்னார். காதர் மொய்தீனுக்கு அதில் உடன்பாடு என்றால் தேர்தலுக்கு முன்பு சென்றிருக்க வேண்டும். திமுக மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்ற அடிப்படையில் தான் தேர்தலை சந்தித்தது.

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வாங்கிய ஓட்டு விஜய் முதலமைச்சராக வரக்கூடாது என கிடைத்தது. அதை எப்படி நியாயப்படுத்துவீர்கள்? என சரமாரியாக விமர்சித்தார்.

தவறாக பரப்பப்படும் கருத்து

இந்த பேட்டியின்போது அப்துல்லா, “இஸ்லாமிய மக்கள் திமுகவுடன் இருக்கிறார்கள். 2001ல் திமுகவுடன் பாஜக கூட்டணி சேர்ந்தது. இதனைக் காரணம் காட்டி இந்திய யூனியன் முஸ்லீம் லீக் அதிமுக கூட்டணிக்கு சென்றது. அந்த தேர்தலில் திமுக வெற்றி வாய்ப்பை இழந்திருந்தாலும் 31 இடங்களில் ஜெயித்தது. அவை அனைத்தும் இஸ்லாமியர்கள் சரிபாதி மக்கள் வாழும் பகுதியாகும் என கூறினார். அப்போது சேப்பாக்கம், திருவல்லிக்கேணி தொகுதி என குறிப்பிட்டார். உடனே சேப்பாக்கம், திருவல்லிக்கேணி ஒரே தொகுதி தான். அது தெரியாமல் அப்துல்லா தனித்தனி தொகுதி என பேசுகிறார் என்று  தவெக ஆதரவாளர்கள் சமூக வலைத்தளத்தில் விமர்சித்தனர்.

Also Read: DMK: ஒரு மாசமாகியும் கொளத்தூர் மக்களை வசைபாடும் திமுக! இதுக்கு இல்லயா சார் எண்ட்

இதற்கு பதிலடி கொடுத்துள்ள அப்துல்லா, “இந்தத் பேட்டியில் நான் சொல்வது 2001 ஆம் ரிசல்ட் பத்தி.. 2001 ஆம் ஆண்டில் திருவல்லிக்கேணியும் சேப்பாக்கமும் தனித் தனி தொகுதி. அன்றைய திருவல்லிக்கேணி தொகுதி எம் எல் ஏ உசேன். சேப்பாக்கம் எம் எல் ஏ கலைஞர். 2011 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் தான் சேப்பாக்கமும் திருவல்லிக்கேணியும் ஒரே தொகுதியாக இணைக்கப்பட்டது. நான் சரியாத்தான் பேசி இருக்கேன்.  கூகிள் பண்ணி பாருங்க தற்குறிகளா!” என தெரிவித்துள்ளார்.

Read Entire Article