திருவள்ளுர் திருநின்றவூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கவுன்சிலர் கோமதி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது, கணவர் ஸ்டிபன் என்பவரே, இந்த வெறிச்செயலில் ஈடுபட்டுள்ளார். கொலை செய்துவிட்டு, திருநின்றவூர் காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளார்.

விசிக பெண் கவுன்சிலர் வெட்டி கொலை:

திருநின்றவூர் பெரிய காலனி பகுதியை சேர்ந்தவர் ஸ்டீபன் ராஜ். இவர், விசிக திருநின்றவூர் நகர செயலாளராக இருந்து வருகிறார். இவரது மனைவி கோமதி. 26ஆவது வார்டு விசிக கவுன்சிலராகவும், திருநின்றவூர் நகராட்சி வரி விதிப்பு சேர்மானாக இருந்து வருகிறார்.

இருவரும் காதலித்து திருமணமாகி 10 வருடத்திற்கு மேலான நிலையில் 4 ஆண் குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில், கவுன்சிலர் கோமதிக்கு ஆண் நண்பர் ஒருவருக்கும் கடந்த சில மாதங்களாக திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாக கூறப்படுகிறது.

கணவரின் வெறிச்செயல்:

இதுகுறித்து, கணவர் ஸ்டீபன்ராஜ்கும் மனைவி கோமதிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில் கவுன்சிலர் கோமதி தனது ஆண் நண்பருடன் நடுகுத்தகை ஜெயராம் நகர் அருகே நின்று பேசி கொண்டிருந்ததாக கணவர் ஸ்டீஃபன் ராஜ்க்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த கணவர் ஸ்டீபன் ராஜ், மனைவி கோமதியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இருவருக்கும் இடையே தகராறு முற்றியதில் ஆண் நண்பர் அங்கிருந்து தப்பி செல்ல தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மனைவி கோமதியை சரமாரியாக தலை, முகம், கழுத்து என பல்வேறு இடங்களில் வெட்டியுள்ளார்.

ஷாக்கான போலீஸ்:

தாக்குதலில் மனைவி கவுன்சிலர் கோமதியின் கை துண்டானது. இதனையடுத்து, ரத்த வெள்ளத்தில் சரிந்த கோமதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதன் பின்னர், அங்கிருந்து சென்ற கணவர் திருநின்றவூர் காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளார்.

இதனை தொடர்ந்து, அவரை கைது செய்த போலீசார், கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையும் படிக்க: TNPSC குரூப் 4 தேர்வு: ஹால் டிக்கெட் வெளியீடு! உடனே பதிவிறக்கம் செய்வது எப்படி? முழு தகவல்!