வலது காலுக்கு பதில் இடது காலில் ஆபரேஷன்: அரசு மருத்துவமனையின் அவலம் - நடந்தது என்ன?

5 months ago 4
ARTICLE AD

விழுப்புரம்: வலது காலில் அறுவை சிகிச்சை சென்ற நோயாளியின் இடது காலில் மருத்துவர் அறுவைசிகிச்சை செய்துவிட்டதாக நோயாளியின் குடும்பத்தினர் குற்றஞ்சாட்டிய சம்பவம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

அரசு மருத்துவமனையில் வலது காலுக்கு பதிலாக இடது காலில் ஆபரேஷன்!

விழுப்புரம் மாவட்டம் பெரியதச்சூர் அருகேயுள்ள விநாயகபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் தனியார் பேருந்து ஓட்டுனர் மாரிமுத்துவிற்கு வலது கால் முட்டியில் ஜவ்வு கிழிந்த நிலையில் அதிக வலியால் அவதிபட்டு வந்துள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட மாரிமுத்து விழுப்புரம் நான்கு முனை சந்திப்பிலுள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டபோது மருத்துவர் சரவணன் தலைமையிலான குழுவினர் மாரிமுத்துவுக்கு அறுவை செய்ய வேண்டுமென கூறியுள்ளனர். அதனை ஏற்று மாரிமுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நான்கு நாட்கள் சிகிச்சை பெற்று அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டுள்ளது. அப்போது சரவணன் தலைமையிலான மருத்துவ குழுவினர் அறுவை சிகிச்சை செய்ய கால் முட்டியில் கத்தியால் கிழித்த போது வலது காலில் அறுவை சிகிச்சை செய்வதற்கு பதிலாக இடது காலில் அறுவை சிகிச்சை செய்ய திறந்தது தெரியவந்தது. இதனையடுத்து அறுவை சிகிச்சை செய்யாமல் தையல்போட்டுள்ளனர்.

அறுவை சிகிச்சைக்காக செலுத்தபட்ட மயக்கம் தெளிந்து மாரிமுத்து மருத்துவர்களிடம் தனக்கு வலது காலில் அறுவை சிகிச்சை செய்வதற்கு பதிலாக இடது காலில் அறுவை சிகிச்சை செய்துள்ளீர்கள் ஏன் என கேட்டுள்ளனர். அதற்கு மருத்துவர் தவறுதலாக இடது காலில் சிகிச்சை செய்ய திறந்து விட்டதாகவும், அதன்பின்னர் அறுவை சிகிச்சை செய்யாமல் மூடிவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

மருத்துவர்கள் தவறாக சிகிச்சை செய்துவிட்டதாக அவரது குடும்பத்தினர்கள் மருத்துவமனையில் வாக்குவாதம் செய்து அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டபோது தவறுதலாக வலது காலில் ஜவ்வு கிழிந்ததற்கு அறுவை சிகிச்சை செய்ய கிழித்தபோது இடது காலில் கிழிக்கப்பட்டது தெரியவரவே சிகிச்சை செய்யாமல் தையல் போட்டு விட்டதாக மருத்துவமனை நிர்வாகத்தினர் மற்றும் மருத்துவர் சரவணன் தெரிவித்துள்ளார்.

Read Entire Article