தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் விக்ரம். உலகநாயகன் கமல்ஹாசனுக்கு நிகராக இவரது நடிப்பு கொண்டாடப்படுகிறது. இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தங்கலான். இந்த படத்தை பிரபல இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கியுள்ளார்.

ரசிகர்களுக்கு நடிகர் விக்ரம் நன்றி:

சுதந்திரத்திற்கு முந்தைய கால திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் அந்த கால மக்களின் வாழ்க்கையை படத்தில் தத்ரூபமாக காட்டியுள்ளனர். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Thank you for the unfathomable love. Couldn’t ask for anything better than this. 💛கோடி நன்றிகள். #thangalaanblockbuster pic.twitter.com/JmD2RYbktL

— Vikram (@chiyaan) August 16, 2024

தங்கலான் படத்திற்கு கிடைத்த தொடர் வரவேற்பைத் தொடர்ந்து, நடிகர் விக்ரம் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தார். ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, “அளவிட முடியாத அன்புக்கு நன்றி. இதைவிட சிறப்பாக எதுவும் கேட்க முடியாது. கோடி நன்றிகள்” இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

வசூலை குவிக்கும் தங்கலான்:

மேலும், அதனுடன் தங்கலான் படத்தின் முதல் நாள் வசூல் விவரத்தையும் பதிவிட்டுள்ளார். தங்கலான் படம் உலகம் முழுவதும் முதல்நாள் ரூபாய் 26.44 கோடி வசூலித்துள்ளது. இந்த படத்தில் விக்ரமுடன் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். ஸ்டூடியோ ஸ்கிரீன் தயாரித்துள்ள இந்த படத்திற்கு தொடர்ந்து அமோக வரவேற்பு கிடைத்து வருவதாலும், இன்று மற்றும் நாளை அரசு விடுமுறை என்பதால் வசூல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

விக்ரமிற்கு குவியும் பாராட்டு:

மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ள தங்கலான் படம் ஆங்கிலேயர்களின் தங்கத்திற்கான தேவைக்கு, இந்த மண்ணின் பூர்வகுடிகள் எவ்வாறு பயன்படுத்தப்பட்டுள்ளனர் என்பதை தெளிவாக காட்டியுள்ளதாக விமர்சகர்கள் பாராட்டி வருகின்றனர். தங்கலான் படத்திற்காக நடிகர் விக்ரம் வித்தியாசமான கெட்டப்பில் நடித்துள்ளார். நடிகர் விக்ரமின் நடிப்பை பலரும் வியந்து பாராட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் விக்ரம் தற்போது வீர தீர சூரன் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது நடிப்பில் உருவாகி நீண்ட நாட்களாக கிடப்பில் உள்ள துருவ நட்சத்திரம் படமும் விரைவில் வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்ப்பில் உள்ளனர்.