யார் அந்த சார்..? செய்தியாளர் கேட்ட கேள்விக்கு கனிமொழி எம்.பி கொடுத்த பதில்!

11 months ago 7
ARTICLE AD
சென்னையில் திமுக மகளிரணி சார்பில் நடைபெற்ற இளம் பெண்கள் பாசறை கூட்டத்தில் அக்கட்சியின் எம்.பி. கனிமொழி கலந்துகொண்டார். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளித்த கனிமொழி, "அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் ஒரு பெண் பாதிக்கப்பட்டு உள்ளார். உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு குற்றவாளி கைது செய்யவும்பட்டிருக்கிறார். இப்போது நீதிமன்றத்தில் வழக்கு சரியாக நடத்தப்பட்டு குற்றவாளிக்கு நியாயமான தண்டனை கிடைப்பதுதான் அந்த பெண்ணுக்கு நியாயம் கிடைத்ததாக இருக்கும். அதில்தான் நாம் கவனம் செலுத்த வேண்டும். பொள்ளாச்சியில் நடந்தது போல் நடவடிக்கையை எடுக்காமல் குற்றவாளியை பாதுகாக்கும் நிலை இல்லை. குற்றவாளி யாராக இருந்தாலும் கைது செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இதற்கு மேல் போராட்டம் செய்வதில் என்ன உள்ளது?." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Read Entire Article