சினிமாவைப் பொறுத்தவரை நடிகர்களுக்கு எத்தனை வயதானாலும் அவர்கள் ஹீரோவாக நடித்துக்கொண்டே இருக்கலாம். ஆனால் நடிகைகளுக்கு அப்படியல்ல. திருமணம் ஆகிவிட்டாலோ அல்லது ஒரு குறிப்பிட்ட வயதை கடந்துவிட்டாலோ எவ்வளவு முன்னணி நடிகையாக இருந்தாலும் சரி அவரை அம்மா கேரக்டருக்கு ஓதுக்கிவிடுவார்கள். ஆனால் ஒரு சில நடிகைகள் மட்டுமே மார்கெட் எதிர்பார்ப்புகளை கடந்து பல வித்தியாசமான கதாபாத்திரங்களை நடித்துள்ளார்கள். அந்த வகையில் மலையாள நடிகர் மம்மூட்டிக்கு மகள் , காதலி , தாய் என மூன்று வேவ்வேறு கேரக்டரில் ஒரு நடிகை நடித்துள்ளார்.

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான மீனா, மலையாள திரையுலகில் அரிதான இந்த சாதனையைப் படைத்துள்ளார். நடிகர் மம்மூட்டியுடன் குழந்தை நட்சத்திரமாகவும், பின்னர் கதாநாயகியாகவும், அதன்பிறகு தாயாகவும் நடித்த ஒரே நடிகை என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

மகள்

மீனாவின் இந்த திரைப்பயணம் பல தசாப்தங்களை கடந்து தொடர்கிறது. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அவர், 'ஒரு கொச்சு பூமிகுலுக்கம்' மற்றும் 'ராகுயிலின் ராகசதஸ்ஸில்' போன்ற படங்களில் மம்மூட்டியுடன் இணைந்து நடித்தார். அப்போது குழந்தை கதாபாத்திரத்தில் நடித்த மீனா, பின்னர் மலையாள சினிமாவின் முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார்.

காதலி

அதன் தொடர்ச்சியாக, 'புதிய கரங்கள்', 'பால்யகாலசகி' உள்ளிட்ட படங்களில் மம்மூட்டிக்கு ஜோடியாக நடித்தார். குழந்தை நட்சத்திரமாக இணைந்து நடித்த நடிகருக்கே பின்னர் கதாநாயகியாக நடித்தது ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்தது.

தாய்

2014-ஆம் ஆண்டு வெளியான 'பால்யகாலசகி' திரைப்படத்தில் மீனா, மம்மூட்டியின் வயதான கதாபாத்திரத்திற்கு மனைவியாக நடித்ததுடன், அதே படத்தில் இடம்பெறும் மம்மூட்டியின் இளமைக்கால கதாபாத்திரத்திற்கு தாயாகவும் நடித்தார். ஒரே திரைப்படத்தில் மம்மூட்டியின் மூத்த கதாபாத்திரத்திற்கு மனைவியாகவும், இளைய கதாபாத்திரத்திற்கு தாயாகவும் நடித்ததன் மூலம், இந்திய சினிமாவில் மிகவும் அரிதான சாதனையை மீனா படைத்தார்.

இதன் மூலம் குழந்தை நட்சத்திரம், காதல் ஜோடி, தாய் என மூன்று வெவ்வேறு பரிமாணங்களில் மம்மூட்டியுடன் திரையைப் பகிர்ந்த ஒரே மலையாள நடிகை என்ற அரிய சாதனையை அவர் படைத்துள்ளார்.

தமிழிலும் அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் ரஜினியுடன் குழந்தை நட்சத்திரமாக நடித்த மீனா முத்து , வீரா ஆகிய படங்களில் ரஜினிக்கு ஜோடியாகவும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.