தெப்பத்திருவிழாவை முன்னிட்டு மதுரையில் போக்குவரத்து மாற்றம்.

தெப்பத் திருவிழா

மதுரை மாநகரில் வெகு விமர்சியாக நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான மதுரை மீனாட்சி அம்மனும், மாரியம்மன் கோவில் தெப்பக்குளத்தில் எழுந்தருளும் தெற்கு திருவிழா (பிப்.1 ம் தேதி) நாளை நடைபெற உள்ளது. இந்த திருவிழாவை காண்பதற்காக மதுரையில் ஏராளமான மக்கள் வருகை தருவர். அன்றைய தினம் பக்தர்களின் வசதிக்காகவும், எந்தவித போக்குவரத்து இடையூறின்றி தெப்ப திருவிழாவை கண்டுகளிக்க அன்று ஒரு நாள் மட்டும் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படும்.

எந்தெந்த இடங்களில் போக்குவரத்து மாற்றம்?

அண்ணா நகரிலிருந்து வைகை வடகரை சாலை P.T.R. பாலம் வழியாக தெப்பகுளம் செல்ல எந்த ஒரு வாகனத்திற்கும் அனுமதி கிடையாது.

வைகை வடகரை சாலையில் வாகனங்களை நிறுத்திவிட்டு P.T.R. பாலம் வழியாக நடந்து சென்று தெப்பக்குளத்திற்க்கு செல்லலாம்.

விரகனூர் ரிங்ரோடு செல்லக்கூடிய பொதுமக்களின் வாகனங்கள் அனைத்தும் சுகுணா ஸ்டோர் சந்திப்பு வழியாக அரவிந்த் கண் மருத்துவமனை சந்திப்பு. குருவிக்காரன் சாலை பாலம் வழியாக வைகை தென்கரை சாலை சென்று விரகனூர் ரிங் ரோடு செல்லலாம்.

ஆவின் மற்றும் குருவிக்காரன் சாலை வழியாக விரகனூர் மற்றும் விரகனூர் ரிங்ரோடு செல்லக்கூடிய அரசு பேருந்துகள் மற்றும் பொதுமக்களின் வாகனங்கள் குருவிக்காரன் சாலை தென்கரை சந்திப்பு சென்று வைகை தென்கரை சாலை வழியாக ரிங்ரோடு செல்ல வேண்டும்.

விரகனூர் ரிங்ரோடு சந்திப்பிலிருந்து தெப்பகுளம் வழியாக நகருக்குள் நுழைய எந்த ஒரு வாகனத்திற்கும் அனுமதி கிடையாது.

விரகனூர் ரிங்ரோடு சந்திப்பிலிருந்து விரகனூர் சாலை வழியாக நகருக்குள் வரும் அரசுப் பேருந்து மற்றும் பொதுமக்களின் வாகனங்கள் வைகை தென்கரை சாலை வழியாக குருவிக்காரன் சாலை வைகை தென்கரை சந்திப்பு சென்று நகரின் எந்த இடத்திற்கும் செல்லலாம்

விரகனூர் ரிங்ரோடு சந்திப்பிலிருந்து விரகனூர் சாலை வழியாக தெப்பத்திருவிழாவை காணவரும் பக்தர்கள் அவர்களது வாகனங்களை வைகை தென்கரை சாலை மற்றும் பழைய ராமநாதபுரரோடு சோதனைச்சாவடி சாலை ஆகிய இடங்களில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

கணேஷ் தியேட்டர் சந்திப்பிலிருந்து தெப்பகுளம் வழியாக விரகனூர் மற்றும் அண்ணாநகர் செல்ல எந்த ஒரு வாகனத்திற்கும் அனுமதி கிடையாது.

பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து முனிச்சாலைரோடு, விரகனூர் சாலை வழியாக விரகனூர் ரிங்ரோடு செல்லக்கூடிய அரசுப் பேருந்து மற்றும் பொதுமக்களின் வாகனங்கள் கணேஷ் தியேட்டர் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி குருவிக்காரன் சாலை தென்கரை சந்திப்பு சென்று தென்கரை சாலை வழியாக ரிங்ரோடு செல்ல வேண்டும்.

இவ்வழியாக தெப்பத்திருவிழாவை காணவரும் பொதுமக்களின் இரு சக்கர வாகனங்களை கணேஷ் தியேட்டர் சந்திப்பு முதல் கண்ணன் டிபார்ட்மெண்டல் கடை வரை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

மேற்படி தெப்பத்திருவிழாவை காணவரும் பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் வசதிக்காக தெப்பக்குளம் 16-សំ மண்டபத்திற்கும் கணேஷ் தியேட்டர் சந்திப்பிற்கும் இடையில் முகைதீன் ஆண்டவர் பெட்ரோல் பல்க் அருகில் பயணிகளுக்காக தற்காலிக பேருந்து நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது.

அனுப்பானடியிலிருந்து தெப்பகுளம் வழியாக நகரின் பிற பகுதிகளுக்கு செல்ல எந்த ஒரு வாகனத்திற்கும் அனுமதி கிடையாது.

இவ்வழியாக தெப்பத்திருவிழாவை காணவரும் பொதுமக்களின் இரு சக்கர வாகனங்களை மீச்சர்ஸ் காலனி பகுதியில் நிறுத்தி விட்டு நடந்து செல்ல வேண்டும்.

முனிச்சாலைரோடு, தெப்பக்குளம் வழியாக அனுப்பானடி செல்லக்கூடிய பொதுமக்களின் வாகனங்கள் முனிச்சாலை சந்திப்பு புதிய ராமநாதபுரம் ரோடு வழியாக கேட்லாக் ரோடு சென்று அனுப்பானடி செல்ல வேண்டும்.