வெளியூர்ல இருந்து வரும் மக்கள் பாவம் நிறைய புகார் அளிக்கிறாங்க !!! யாரு இங்க கேள்வி கேட்கிறது என்பது தான் பிரச்சனையாவே இருக்கு - அனைத்து துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து செயல்படனும் - மதுரை மாட்டுத்தாவணியில் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட எம்எல்ஏ.

மதுரை மாட்டுத்தாவணி பேருந்துநிலையம்

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து பல்வேறு மாவட்டங்களில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான பேருந்துகள் இயக்கப்படுவதால் பல்லாயிரக்கணக்கான பயணிகள் பேருந்து நிலையத்திற்கு வந்துசெல்கின்றனர். இந்நிலையில் மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் மினி பஸ்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் அரசு போக்குவரத்து கழக பேருந்துகள் நிற்க முடியாமல் தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு பொதுமக்கள் பேருந்துகளில் ஏறுவதில் சிரமம் ஏற்பட்டு அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. இது தொடர்பாக பயணிகள் மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினருக்கு பல்வேறு புகார்கள் தெரிவித்த நிலையில், மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் போக்குவரத்து நெரிசல் குறைப்பது, அடிப்படை வசதிகளை மேம்படுத்து, பேருந்து நிலைய சீரமைப்பு பணிகளை விரைவுபடுத்துவது குறித்து சட்டமன்ற உறுப்பினர் கல்லாணை காவல்துறை, போக்குவரத்து துறை மாநகராட்சி அதிகாரிகள், போக்குவரத்து கழக அதிகாரிகள், ஓட்டுனர்கள் உள்ளிட்டோருடன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு உள்ள பிரச்னைகள் குறித்து கேட்டறிந்த போது அனுமதியின்றி ஏராளமான மினி பேருந்துகள் பேருந்து நிலையங்களுக்கு நிற்பதை பார்த்து, இதனால் தான் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக காவல்துறையினரிடம் தெரிவித்தார்.

அனுமதியின்றி மினி பேருந்துகள் உள்ளே வந்தால் அபராதம் விதிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்

அப்போது பதிலளித்த போக்குவரத்து துறை அதிகாரிகள், காவல்துறையினர் இதுபோன்று அனுமதியின்றி மினி பேருந்துகள் உள்ளே வந்தால் அபராதம் விதிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். அப்போது பேசிய எம்எல்ஏ கல்லாணை இங்கு யார் கேள்வி கேட்பது என்பது தான் பிரச்சனையாக உள்ளது. எனவே அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு பயணிகளுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் போக்குவரத்து நெரிசலை குறைக்க வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும் மினி பஸ்கள் நிற்பதற்கு தனி இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும். அனுமதி உள்ள மினிபஸ்கள் மட்டும் மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திற்கு வந்து செல்வதற்கு அனுமதிக்க வேண்டும். இருசக்கர வாகனங்கள் நிறுத்துவதை தவிர்க்க வேண்டும், பயணிகள் எந்தவித இடையூறும் இன்றி வந்து செல்வதற்கான ஏற்பாடுகளும் செய்ய வேண்டுமென தெரிவித்தார். அப்போது அங்குவந்த பெண் ஒருவர் கழிவறையில் தண்ணீர் இல்லை. முறையாக பராமரிப்பது இல்லை என எம்எல்ஏவிடம் கூறிய போது உடனடியாக மாநகராட்சி அதிகாரிகளை அழைத்து அந்த பெண்ணையும் அழைத்து நீங்கள் நேரில் சென்று புகார் கூறும் இடத்தை காட்டுங்கள் என கூறி அதிகாரிகளை உடனடியாக நடவடிக்கை எடுங்கள் என கூறினார்.

நன்றி தெரிவித்தனர்

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் பயணிகள் பாதிக்கப்படுவதாக வந்த புகாரில் உடனடியாக நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட போக்குவரத்து நெரிசலை குறைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்ட எம்எல்ஏவின் நடவடிக்கைக்கு அங்குள்ள பயணிகள் நன்றி தெரிவித்தனர்.