' போக போக தெரியும் ' ஸ்ரீகாந்திமதிக்கு பதவி? ராமதாஸின் அதிரடி பதில்!

5 months ago 5
ARTICLE AD

விழுப்புரம் : எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் ஏற்கனவே அரசியலுக்கு வந்துவிட்டனர், தற்சமயம் ஶ்ரீகாந்திமதிக்கு பதவி வழங்கப்படாது.. போக.. போக தெரியும் என பாட்டுப் பாடியபடியே பதிலளித்தார் மருத்துவர் ராமதாஸ்.

ஶ்ரீகாந்திமதிக்கு பதவி வழங்கப்படாது.. போக.. போக தெரியும்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகேயுள்ள ஓமந்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாமக கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் அக்கட்சியின் நிறுவன தலைவர் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ராமதாசால் புதியதாக நியமிக்கப்பட்ட பொதுசெயலாளர் முரளி சங்கர், பொருளாளர் சையத் மன்சூர் உசேன், கரூர் பாஸ்கர் மற்றும் முக்கிய நிர்வாகிகளாக ஜி கே, மணி , ஏகே மூர்த்தி, புதா, அருள்மொழி எம் எல் ஏ அருள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

செயற்குழு மேடையில் ராமதாஸ் மூத்தமகள்

கட்சியில் குடும்ப வாரிசுகளுக்கு நிர்வாக பொறுப்பு வழங்க மாட்டேன் அன்புமணி ராமதாசுக்கு வழங்கி தவறு செய்துவிட்டதாக மருத்துவர் ராமதாஸ் செய்தியாளர் சந்திப்பின்போது குறிப்பிட்டிருந்தார். பாமக சார்பில் நடைபெறும் கட்சி கூட்டங்கள் நிர்வாக குழு, செய்ற்குழு கூட்டங்களில் பங்கேற்காமல் இருந்து வந்த ராமதாசின் மூத்த மகள் ஸ்ரீ காந்திமதி  நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் பாதியில் வந்து பங்கெடுத்து மேடைக்கு அருகேயுள்ள முன் வரிசையில் அமர்ந்திருந்தார்.

சில நிமிடங்கள் அமர்ந்திருந்த காந்திமதியை மருத்தவர் ராமதாஸ் மேடையில் அமர கூறியதால் மேடையில் இருந்த இருக்கைகளில் இரண்டாவது வரிசையில் ஸ்ரீகாந்திமதி அமர்ந்து செயற்குழு கூட்டத்தில் பங்கேற்றார். செயற்குழு கூட்டம் முடிவதற்கு முன்னதாகவே செயற்குழு கூட்ட மேடையிலிருந்து ஸ்ரீகாந்திமதி புறபட்டு சென்றார்.

மகளுக்கு ஒரு நீதி.. மருமகளுக்கு ஒரு நீதியா..?

"என்னுடைய குடும்பத்தை சார்ந்த பெண்கள் யாரும் அரசியல் கட்சிக்கு வருவதை நான் விரும்பவில்லை, அந்த அடிப்படையில் சௌமியா அன்புமணி அரசியலுக்கு வர வேண்டாம் என்று நான் சொன்னேன்; தர்மபுரியிலும் சௌமியா போட்டியிட வேண்டாம் என்று நான் சொன்னேன்" என டாக்டர் ராமதாஸ் தெரிவித்திருந்தார்  ஆனால் இன்று அவரே அதனை மீறி தன்னுடைய மூத்த மகள் ஸ்ரீகாந்தியை மேடை ஏற்றி இருக்கிறார்.  செயற்குழு கூட்டத்திற்கும் அழைத்து வந்திருக்கிறார், ஏன் இந்த முரண் ஏன் இந்த தடுமாற்றம் என அன்புமணி ஆதரவாளர்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.

இந்தநிலையில் இன்று பாமகவின் கும்பகோணம் மாவட்ட பொதுக்குழு கூட்டத்துக்கு சென்ற தந்த மருத்துவர் ராமதாஸிடம் செய்தியாளர்கள், அவரது மகள் ஶ்ரீகாந்திக்கு கட்சிப் பதவி வழங்கப்படுமா? என செய்தியாளர்கள்  கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த மருத்துவர் ராமதாஸ், எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் ஏற்கனவே அரசியலுக்கு வந்துவிட்டனர் . தற்சமயம் ஶ்ரீகாந்திக்கு பதவி வழங்கப்படாது.. போக.. போக தெரியும் என பாட்டுப் பாடியபடியே பதிலளித்தார்.

Read Entire Article