சேலம்: ஆத்தூர் அருகே மர்ம நபர் புதுவித நோய் பரவுவதாக பெண்களுக்கு மொட்டை அடித்து பணத்தை ஆட்டையைப் போட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே புது கொத்தாம்பாடி கிராமத்தைச் சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்க பெண்ணுக்கு மொபைல் போனில் தொடர்பு கொண்ட நபர் தாலுகா அலுவலகத்தில் இருந்து பேசுவதாகவும், கொரோனா போன்று புதுவிதமான நோய் பரவி வருவதாகவும் இந்த நோய் தலைமுடி வழியாக பரவுவதால் வெளிநாடுகளில் இருந்து மொட்டை அடித்துக் கொண்டு நோயிலிருந்து தப்பித்துள்ளனர் என்றும் மேலும் மொட்டை அடித்தால் ஊக்க தொகையாக 15000 ரூபாய் தருவதாகவும், ஆண்களுக்கு 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், நம்பிக்கை இல்லை என்றால் ஏற்கனவே இது போல் மொட்டை அடித்து பணம் பெற்ற சில போட்டோகளை அனுப்பி உள்ளனர். தொடர்ந்து போனில் பேசிய மர்ம ஆசாமியின் பேச்சை நம்பி அதே பகுதியைச் சேர்ந்த 3 பெண்கள் ஆகியோர் மொட்டை அடித்துள்ளனர். மேலும் சிலர் மொட்டை அடிக்க தயாராக இருந்த நிலையில் பணம் தருவதாக கூறிய நபரை தொடர்பு கொண்டபோது அவரது போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருந்ததால் அதிர்ச்சி அடைந்தனர். அதன்பின் தான் மொட்டை அடிக்கச் சொல்லி ஏமாற்றியுள்ளது தெரிய வந்தது. மற்ற நபர்கள் மொட்டை அடித்ததை தவிர்த்து உள்ளனர்.

தெரியாத நபர்களிடம் இருந்து வரும் செல்போன் அழைப்புகளில் கவனமாக இருக்க வேண்டும் என்று பல விழிப்புணர்வுகளை அரசு சார்பில் கொடுக்கப்பட்டு வருகிறது. பணத்தை பறிப்பதுபோல பேசுபவர்களிடம் ஏமாற வேண்டாம் என்று பல அறிவுறுத்தல்களை காவல்துறையின் சார்பிலும் வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும், இதுபோன்ற சம்பவங்கள் நடந்து வருகிறது. எனவே, நாம்தான் கவனமாக இருக்க வேண்டும்.