பாமக தலைமைக் குழு கூட்டம்; அதிரடி முடிவு எடுத்த அன்புமணி... பரபரக்கும் அரசியல் களம்

5 months ago 4
ARTICLE AD

பாட்டாளி மக்கள் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கூட்டம் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் தலைமையில் சென்னையில் (08.07.2025) நடைபெற்றது. கட்சியின் பொதுச்செயலாளர் ச.வடிவேல் இராவணன், பொருளாளர் ம.திலகபாமா உள்ளிட்ட அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்களும், சிறப்பு அழைப்பாளர்களும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்

தமிழ்நாட்டின் பொதுவான அரசியல் சூழ்நிலை, கட்சி வளர்ச்சிப் பணிகள், 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது, ஜூலை 25 ஆம் தேதி முதல் கட்சித்தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் மேற்கொள்ளவிருக்கும் தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணத்தை வெற்றிகரமாக நடத்துவதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அதன் முடிவில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

தீர்மானங்கள்

1. பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்களின் செயல்பாடுகளுக்கு துணை நிற்கவும், அவரது கரங்களை வலுப்படுத்தவும் பாட்டாளி மக்கள் கட்சி உறுதி ஏற்கிறது.

2. வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க மறுக்கும் திமுக அரசைக் கண்டித்து மருத்துவர் அன்புமணி இராமதாஸ் தலைமையில் வரும் ஜூலை 20 ஆம் நாள் போராட்டம்

3. பாட்டாளி மக்கள் கட்சியின் 37 ஆம் ஆண்டு விழாவை தமிழ்நாடு மற்றும் புதுவையில் சிறப்பாக கொண்டாட வேண்டும்!

4. அரசு கல்லூரிகளில் முதல்வர்களை நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சியின் மாணவரணி சார்பில் போராட்டங்கள்

5. மருத்துவர் அன்புமணி இராமதாஸ் மேற்கொள்ளவிருக்கும் 100 நாள் தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணத்தை வெற்றி பெறச் செய்ய கடுமையாக உழைப்போம்!

6. திருப்புவனம் காவல் நிலையக் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட உயரதிகாரிகளின் பெயர்களை வெளியிட வேண்டும்; அவர்களையும் வழக்கில் சேர்த்து கைது செய்ய வேண்டும்!

7. பெண்களும், குழந்தைகளும் வாழத்தகுதியற்ற மாநிலமாக மாறும் தமிழ்நாடு; சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!

8. தமிழகத்தையும், தமிழக மக்களையும் காப்பாற்ற, அனைத்துத் துறைகளிலும் படுதோல்வி அடைந்து விட்ட திமுக அரசை அகற்ற பாட்டாளி மக்கள் கட்சி உறுதியேற்கிறது.

திண்டிவனத்தில் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் செயற்குழு கூட்டம்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகேயுள்ள ஓமந்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாமக கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் அக்கட்சியின் நிறுவன தலைவர் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில்  ஜிகே, மணி , ஏகே மூர்த்தி, புதா, அருள்மொழி எம்எல்ஏ உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற வேட்பாளர்கள் விருப்ப மனு கொடுக்க ஆயுத்தமாகுங்கள்
செயற்குழு கூட்ட மேடையில் பேசிய பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ்...

96 ஆராயிரம் கிராமங்கள் சென்று கட்சியை வளர்த்திருக்கிறேன் என் வலியை புரிந்தவர்கள் உணர்ந்தவர்கள் இங்கே வந்திருப்பதாகவும் 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணியில் தேர்தலை சந்திக்க உள்ளதால் அதற்கான அதிகாரத்தினை நிர்வாக குழு மற்றும் செய்ற்குழு தனக்கு வழங்கி விட்டதாக தெரிவித்தார். எனவே வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியை தான் துவங்கி விட்டதால், சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற வேட்பாளர்கள் விருப்ப மனு கொடுக்க ஆயுத்தமாகுங்கள் என்று கூறினார். சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கு தேர்தல் ஆணைய விண்ணப்ப படிவமான ஏ பார்ம் பி பார்மில் கையெழுடுத்திடும் அதிகாரம் தனக்கு மட்டுமே உள்ளது என உங்க்ளுக்குள் உள்ள சந்தேகம் அனைத்தும் போய்விட்டதாக தெரிவித்தார்.

சந்தேகம் பட்டவர்களுக்கு மருந்து: எங்கே செல்வது என காத்திருந்தவர்களுக்கு இப்போது சந்தேகம் தீர்ந்து இருக்கிறது சந்தேகம் பட்டவர்களுக்கு மருந்து கிடைத்திருக்கிறது இங்கு வந்தவர்களுக்கு விருந்து கிடைத்துள்ளதாக கூறினார்.  மகளிர் மாநாடு 8 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறுவதாகவும் , ஊடக நண்பர்கள் நமக்கு எப்போதும் துணையாக உள்ளார்கள், அவர்களும் பாட்டாளிகள் தான். வரலாற்று சிறப்புமிக்க செயற்குழு கூட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு வாழ்த்துக்கள் என மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

அன்புமணி ராமதாசுக்கு எதிராக தீர்மானம் : தலைமை உத்தரவுக்கு கட்டுப்படாமல் கட்சியை பலவீனப்படுத்தும் நபர்கள் மீது கட்சி விதிகளின்படி ஒழுங்கு நடவடிக்கை எடுத்து அவர்களுக்கு விசாரணை நடத்தி தேவைப்பட்டால் தற்காலிக நீக்கம் செய்து பிறகு நடவடிக்கைகளை எடுத்து கட்சியின் மாண்பையும் நிறுவன மாண்பையும் நிறுவனரே தலைவராக பொறுப்பேற்றுக் கொண்ட பிறகு நிறுவனருமான அவருக்கு பொறுப்பற்ற பதிலை சொல்லி பொதுவெளியில் அவருடைய பேச்சுக்கு கட்டுப்படாமல் இருப்பது மிக வன்மையாக கண்டிக்கத்தக்கது.

அப்படிப்பட்ட செயலுக்கு அந்த செயல் தலைவர் வருத்தம் கேட்டுக் கொள்வது மட்டுமல்லாமல் தனக்கு பதவி ஒன்றும் தேவையில்லை என்றும் தொண்டராக இருப்பேன் என்றும் மூன்றாண்டுகள் பதவி வகித்த பிறகு மீண்டும் தலைவர் பதவியை அபகரிக்கும் எண்ணத்தில் நிறுவன தலைவர் இதுவரை கட்டி காத்து வந்த ஒரு கட்டுப்பாட்டினை

பொதுவெளியில் கட்சிக்கு மட்டும் களங்கம் விளைவிக்காமல், நிறுவன தலைவருக்கும் களங்கத்தை உருவாக்கும் வகையிலே செய்து உள்ள செயல் மிகவும் வன்மையாக கண்டிக்கத்தக்கது. அப்படிப்பட்ட ஒரு நடவடிக்கை யார் செய்தாலும் அவர்களை கட்சி கண்டிப்பாக நடவடிக்கை எடுத்து விசாரிக்கும் என்பதை செயற்குழு வாயிலாக தீர்மானம் செய்து அப்படிப்பட்ட நடவடிக்கையை நம்முடைய மருத்துவர் அய்யா நிறுவன தலைவர் மற்றும் தலைவராக உள்ளவருக்கு அங்கீகாரம் வழங்கி ஏற்பாடு செய்ய தீர்மானிக்கப்படுகிறது.

வருகிற 2026 தேர்தலில் கூட்டணி அமைத்து வெற்றி கூட்டணியாக அமைத்து வெற்றி பெற்று ஆட்சி அதிகாரத்தில் பங்கு பெறக்கூடிய வகையில் கூட்டணியை யாருடன் வேண்டுமானாலும் மருத்துவர் அய்யா நிறுவனத் தலைவர் அவர்கள் எடுத்துக்கொள்ள இந்த செயற்குழு தீர்மானிக்கிறது.

Read Entire Article