பாபி சிம்ஹா வெளியிட்ட இந்தியாவின் முதல் நடன OTT தளமான ஜூபாப் ஹோம்! இப்போது ஐரோப்பாவிலும்!

1 year ago 14
ARTICLE AD

ஷெரிப் மாஸ்டர் தனது நடன தளமான ஜூபாப் ஹோம் ஆப்பை இன்னுமொரு உயரத்திற்கு கொண்டு சென்றுள்ளார். டிசம்பர் 14 அன்று சுவிட்சர்லாந்தில் நடந்த இசை துள்ளல் 2024 நிகழ்வில் பிரத்தியேகமாக இதனை அறிமுகம் செய்துள்ளார்.

ஜூபாப் ஹோம் கடந்த நவம்பர் 30 அன்று, சென்னையில் பிரம்மாண்டமாக அறிமுகமானது. அந்த நிகழ்ச்சியில் கார்த்திக் சுப்புராஜ், ராஜ்குமார் பெரியசாமி ஆகிய இயக்குநர்கள் மற்றும் நடிகர் பாபி சிம்ஹா கலந்து கொண்டு ஜூபாப் ஹோம் தளத்தை வெளியிட்டனர். நடன ஆர்வலர்களை ஊக்குவிக்கும் ஒரு தளத்தை உருவாக்கியதற்காக ஷெரிப் மாஸ்டரின் அர்ப்பணிப்பபையும் மற்றும் அவரின் ஆர்வத்தையும் மூவரும் பாராட்டினர்.

மேலும், சோலோ மூவிஸ் வழங்கிய சுவிட்சர்லாந்து நிகழ்ச்சி நூற்றுக்கணக்கான நடன குழுக்களின் உற்சாகமான நடனங்களுடன் சிறப்பாக நடைபெற்றது. இந்த ஆப், சோலோ மூவிஸ் வசி, வரதன், மற்றும் பிரபல நடன ஆசிரியர் கௌரி ஆகியோரால் சுவிட்சர்லாந்தில் உள்ள தமிழ் சமூகத்திற்கும் இந்தியர்களுக்கும் பிரத்தியேகமாக அறிமுகம் செய்துள்ளனர்.

இந்தியாவின் முதல் நடன OTT தளமான ஜூபாப் ஹோம், இப்போது ஐரோப்பா முழுவதும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுளள்து. இது நடன ஆர்வலர்கள் இணைந்து ஆக்கபூர்வமாக செயல்பட சிறந்த தளமாக திகழ்கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்களுக்கும் பொருத்தமான தனிப்பட்ட உள்ளடக்கங்களை கொண்டிருக்கும் ஜூபாப் ஹோம், நடனத்தை நேசிக்கும் ஒவ்வொருவருக்கும் சிறந்த தளமாக உள்ளது என கூறி வருகிறார்கள். விரைவில் பல நாடுகளிலும் அறிமுகப்படுத்தும் நோக்கத்தில் டான்ஸ் மாஸ்டர் ஷெரிப்  உள்ளார்.

Read Entire Article