பாட்னா டு டெல்லி இண்டிகோ விமானத்தில் பறவை மோதல்! 175 பயணிகளின் நிலை என்ன?

5 months ago 5
ARTICLE AD

பாட்னா விமான நிலையத்திலிருந்து டெல்லிக்குச் சென்ற இண்டிகோ விமானம் காலையில் புறப்பட்ட சில நிமிடங்களில் அவசர அவசரமாகத் தரையிறங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது

பறவை மோதல்:

கிடைத்த தகவலின்படி, விமானம் காலை 8:41 மணிக்கு பாட்னா விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது, ஆனால் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, ஒரு இயந்திரத்தில் அதிர்வு உணரப்பட்டது, இதன் காரணமாக விமானம் பாட்னாவுக்குத் திரும்ப வேண்டியிருந்தது.  விமானம் புறப்பட்ட போது பறவை ஒன்று விமானத்தின் இயந்திரங்களில் ஒன்றில் மோதியதால் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டடுள்ளது. விமானத்தின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, விமானி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து பாட்னா விமான நிலையத்தில் விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்கினார். இந்த விமானத்தில் மொத்தம் 175 பயணிகள் இருந்தனர். தற்போது, ​​தொழில்நுட்ப சோதனை நடைபெற்று வருகிறது மேலும் பயணிகளை டெல்லிக்கு அழைத்துச் செல்ல மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

பாட்னா விமான நிலையம் தனது அறிக்கையில் என்ன கூறியது?:

பாட்னா விமான நிலையம் வெளியிட்ட அறிக்கையில், "பாட்னாவிலிருந்து டெல்லிக்குச் சென்ற IGO5009 விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே 08:42 IST மணிக்கு பறவை மோதியதாகப் தெரிவித்தது. ஓடுபாதையில் ஆய்வு செய்தபோது, ​​இறந்த பறவையின் துண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்தத் தகவல் விமானநிலை கட்டுப்பாட்டுப் பிரிவால் விமானத்திற்கு வழங்கப்பட்டது" என்று கூறப்பட்டுள்ளது.

விமான நிலைய அதிகாரிகளின் கூற்றுப்படி, "பறவை மோதிய பிறகு, விமானத்தின் இயந்திரத்தில் அதிர்வுகள் காணப்பட்டன, இதன் காரணமாக விமானி விமானத்தை பாட்னாவிற்கு திருப்பி அனுப்ப முடிவு செய்தார். உள்ளூரில் அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டு, விமானம் காலை 09:03 மணிக்கு ஓடுபாதை 7 இல் பாதுகாப்பாக தரையிறங்கியது."

நேற்றும் ஒரு இண்டிகோ விமான கோளாறு:

முன்னதாக, செவ்வாய்க்கிழமை (ஜூலை 8, 2025) காலை, இந்தூரில் இருந்து ராய்ப்பூருக்குச் செல்லும் இண்டிகோ விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக புறப்பட்ட சுமார் 30 நிமிடங்களுக்குப் பிறகு அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமான எண் 6E 7295, இந்தூரிலிருந்து ஒவ்வொரு நாளும் காலை 6:35 மணிக்குப் புறப்படுகிறது. செவ்வாய்க்கிழமை, விமானம் சரியான நேரத்தில் புறப்பட்டது, ஆனால் சிறிது நேரத்திற்குப் பிறகு, முன்னெச்சரிக்கையாக விமானத்தை இந்தூர் விமான நிலையத்திற்குத் திரும்பக் கொண்டு வர விமானி முடிவு செய்தார்.

Read Entire Article