பழனி மட நில மோசடி தொடர்பான வழக்கில் சர்ச்சைக்கு உட்பட்ட சொத்தை வாங்கிய பாப்பான் குளம் பகுதியைச் சேர்ந்த வெள்ளத்துரை என்பவர் முன்ஜாமின் கோரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு.

பழனி மடம் பதிவு தொடர்பான வழக்கு

பாப்பான் குளம் பகுதியைச் சேர்ந்த வெள்ளத்துரை என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில், பழனி மடம் பதிவு தொடர்பான வழக்கில் தனக்கு முன்ஜாமின் வழங்கக்கோரி மனு தாக்கல் செய்திருந்தார், தண்டபாணி சுவாமிகள் மடத்திற்கு சொந்தமான,1.4 ஏக்கர் நிலத்தை மோசடியாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக என் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நான் வழக்கு விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குகிறேன். பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது. எனவே எனக்கு முன் ஜாமின் வழங்கி உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார்.

முன் ஜாமின் மனு தள்ளுபடி

இந்த மனு நீதிபதி ராஜசேகர் முன் விசாரணைக்கு வந்தது, போதிய முகாந்திரம் இருப்பதால். விரிவான விசாரணை தேவைப்படுவதால். நிலத்தை மதிப்பை குறைத்து வாங்கியதால் மனுதாரரின் முன் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது