பழனி கோயில் நில மோசடி: 100 கோடி நிலத்தில் சிபிசிஐடி அதிரடி; உயர்மட்டக் குழுவும் களத்தில்!

3 months ago 5
ARTICLE AD

பழனி முருகன் கோயில் நில மோசடி விவகாரத்தில், CBCID போலீசார், முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்டதில் சம்மந்தப்பட்ட 1.40 ஏக்கர் இடத்தில் CBCID எஸ்பி சஜிதா, டிஎஸ்பி அஜய் தங்கம் உள்ளிட்ட அதிகாரிகள் நேரடியாகக் கள ஆய்வு நடத்தியதைத் தொடர்ந்து, தற்போது மீண்டும் பழனி சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வருகை தந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பழனி முருகன் கோயில் நில மோசடி விவகாரத்தில் ஒருபுறம் சிபிசிஐடி போலீசார் தங்களது 6-வது நாள் விசாரணையைத் திண்டுக்கல்லில் தொடங்கியுள்ள நிலையில், மறுபுறம் பழனி சார்பதிவாளர் அலுவலகத்தில் தமிழக பத்திரப்பதிவுத் துறை அமைத்த உயர்மட்டக் குழுவினர் 3 பேரும் நேரில் வந்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். பழனியில் தண்டாயுதபாணி சுவாமி மடத்திற்குச் சொந்தமான கோயில் நிர்வகிக்கும்  100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் போலி ஆவணங்கள் மூலம் முறைகேடாகப் பத்திரப் பதிவு செய்யப்பட்ட விவகாரத்தில், அரசு ரீதியாகவும் காவல்துறை ரீதியாகவும் விசாரணைகள்  நடந்து வருகின்றன.

கடந்த 5 நாட்களாகப் பழனியில் முகாமிட்டு, 1.40 ஏக்கர் நிலத்தில் கள ஆய்வு மற்றும் நேற்று சார்பதிவாளர் அலுவலகத்தில் 10 மணி நேரத்திற்கும் மேலாக  விசாரணை நடத்திய சிபிசிஐடி எஸ்பி சஜிதா தலைமையிலான போலீசார், இன்று தங்களது 6-வது நாள் விசாரணையைத் திண்டுக்கல் தலைமையகத்தில் தொடங்கியுள்ளனர்.

இதனிடையே, பழனி கோயில் நில மோசடி தொடர்பாகத் தமிழக பத்திரப்பதிவுத் துறை சார்பில் அமைக்கப்பட்ட 3 பேர் கொண்ட சிறப்பு உயர்மட்டக் குழுவினர் அனைவரும் இன்று பழனி சார்பதிவாளர் அலுவலகத்திற்கு நேரடியாக வருகை தந்துள்ளனர். பதிவுத்துறை கூடுதல் தலைவர் (Additional IG) சுதா மால்யா, உதவி பதிவுத்துறைத் தலைவர் (Assistant IG) பூங்கொடி மற்றும் உதவி பதிவுத்துறைத் தலைவர் கண்ணன் ஆகிய 3 பேர் கொண்ட விசாரணை குழுவினர் பழனி சார்பதிவாளர் அலுவலகத்தில்  ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர். 100 கோடி ரூபாய் நிலம் முறைகேடாகப் பதிவு செய்யப்படப் பயன்படுத்தப்பட்ட அசல் கோப்புகள், கணினிப் பதிவேடுகள், மற்றும் சார்பதிவாளர் அலுவலக ஊழியர்களின் பங்கு குறித்து இந்தக் குழுவினர் ஆழமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Entire Article