பழனி 100 கோடி நில மோசடி: சார்பதிவாளர் கைது, இடைத்தரகர் தலைமறைவு! நடந்தது என்ன?

2 months ago 5
ARTICLE AD

பழனி தண்டபாணி சுவாமிகள் மடத்திற்கு சொந்தமான, ரூ.100 கோடி மதிப்பிலான 1.4 ஏக்கர் நிலம் கடந்த ஜூலை 6ஆம் தேதி ரூ. 2 கோடிக்கு பத்திரபதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக பழனி அடிவார காவல் நிலையம் சார்பில் 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின், ஜூலை 15ஆம் தேதி தமிழ்நாடு அரசு உத்தரவின் பேரில் வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டது.

பின் திண்டுக்கல் சிபிசிஐடி போலீசார் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், மடத்து வாரிசுதாரர் முருகதாஸ் நிலத்தை வாங்கிய திருப்பூர் மாவட்டம் பாப்பன்குளம் பகுதியை சேர்ந்த வெள்ளத்துரை,  பழனி டி கே என்  புதூரைச் சேர்ந்த சேதுபதி, பத்திரம் தயாரித்து கொடுத்த வழக்கறிஞர் அன்வர்தீன், இடைத்தரகராக செயல்பட்ட ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த ஜெயபிரகாஷ் உள்ளிட்ட 11 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

மேலும் இவ்வழக்கில் தொடர்பாக அறக்கட்டளை நிர்வாகி முருகதாஸ், இடத்தை வாங்கிய வெள்ளத்துரை சேதுபதி வழக்கறிஞர் அன்வர்தின் ஆகியோரை கடந்த 29ம் தேதி சிபிசிஐடி போலீசார் கைது செய்து திண்டுக்கல் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் ஒன்றில் ஆஜர்படுத்தினர். மேலும் 4 பேரையும் ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி  உத்தரவிட்டார்.  இதனிடையே சிறையில் அடைக்கப்பட்டுள்ள  4 பேரையும் சிபிசிஐடி போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

பின் திண்டுக்கல் நீதித்துறை குற்றவியல் நடுவர் நீதிமன்றம்  4 பேரையும் 5 ஆம் தேதி முதல் வெள்ளிக்கிழமை 7ஆம் தேதி மதியம் வரை 3 நாட்கள் சிபிசிஐடி போலீஸ் காவலில் எடுத்து விசாரணை செய்ய நிபந்தனையுடன் நீதிபதி உத்தரவிட்டார். இவ்வழக்கு தொடர்பாக சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை மூலம் முன்ஜாமீன் பெற்றுள்ளார். இந்த ஜாமீன் ஆகஸ்ட் 3ஆம் தேதி முடிவடைந்தது.

இந்த நிலையில் கடந்த 05.08.26 ஜஸ்டின் மணிகண்டன் மற்றும் பத்திர எழுத்தாளர் ஜெயபிரகாஷ் ஆகிய இருவரின் முன்ஜாமீன் மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைகிளை நீதிபதி ராஜசேகர், இருவரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதனையடுத்து  நேற்று (06.08.26) திண்டுக்கல் சிபிசிஐடி போலீசார் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனை கொடைக்கானல் பகுதியில் வைத்து  கைது செய்துள்ளனர். மேலும் இடைத்தரகர் மற்றும் பத்திர எழுத்தர் ஜெயபிரகாஷ் தலைமறைவு ஆகியுள்ளார். ஒட்டன்சத்திரத்தில் உள்ள ஜெயபிரகாஷ் வீட்டில் காலை முதல் சிபிசிஐடி போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதே நிலையில் அவரது மனைவி செண்பகமதி உட்பட 8 நபர்களிடம் திண்டுக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணை  நடைபெற்று வருகிறது.

Read Entire Article