மாநகராட்சி பகுதிகளில் உள்ள முக்கிய சாலைகள் இனி மாநில நெடுஞ்சாலைத்துறையால் பராமரிக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் நேற்று நெடுஞ்சாலைத்துறை தொடர்பான மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின் மீது அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேசினார். அப்போது பல்வேறு சாலை திட்டங்கள் தொடர்பான அறிவிப்புகளை வெளியிட்டார்.

மாநகராட்சி சாலைகள் இனி நெடுஞ்சாலைத்துறை வசம்

அதன்படி, மாநகராட்சி பகுதிகளில் பேருந்துகள் இயக்கப்படும் முக்கிய சாலைகள் நெடுஞ்சாலை துறை மூலம் தரம் உயர்த்தப்படும். முதற்கட்டமாக சென்னை, தாம்பரம், ஆவடி, திருச்சி, தூத்துக்குடி, மதுரை, கோவை ஆகிய மாநகராட்சிகளில் உள்ள தேர்வு செய்யப்பட்ட 500 கிலோமீட்டர் சாலைகள் ரூ.1000 கோடி மதிப்பீட்டில் சரி செய்யப்படும். சென்னை மாதிரியான மாநகராட்சிகளில் பரமாரிக்கப்படும் சாலைகள் தொடர்ச்சியாக சரியில்லை என புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. அதனால் முதலமைச்சர் விஜய் நெடுஞ்சாலை துறைக்கு அதனை பராமரிக்கும் பொறுப்பை ஒப்படைக்க உத்தரவிட்டார். இதற்கான சிறப்பு திட்டங்கள் தீட்டப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

பொதுவாக மாநகராட்சி சாலைகளை சம்பந்தப்பட்ட உள்ளூர் நிர்வாகமே பராமரித்து வருகிறது. ஆண்டுக்கு இரண்டு முறை சாலைகளை செப்பனிடுதல், சாலை சேதமடைந்தால் உடனுக்குடன் சீரமைத்தல் என பல பணிகள் மேற்கொள்ளப்பட்டாலும் அதில் பெரும்பாலும் பொதுமக்களுக்கு திருப்தி இருப்பதில்லை. ஒன்று அசுர வேகத்தில் சாலைகள் போடப்படுகிறது. இல்லாவிட்டால் ஆமை வேகத்தில் பணிகள் நடைபெறுகிறது. சில இடங்களில் சாலை வசதிகளே இருப்பதில்லை. அதேசமயம் மாநகராட்சி பகுதி வழியே செல்லும் பெருவழிகளை மாநில அல்லது தேசிய நெடுஞ்சாலைத் துறை தான் பரமாரிக்கும். இப்படியான நிலையில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவின் இந்த அறிவிப்பு வரவேற்பை பெற்றுள்ளது.

பேட்ச் ஒர்க் செய்வதில் ஊழல்

மேலும், சாலைகளை சீரான முறையில் பள்ளங்கள் இல்லாமல் பராமரிக்க செயல் திறன் அடிப்படையில் கண்காணிப்பு, நம்ம செயலி மேம்பாட்டை உள்ளடக்கிய சீரான சாலை திட்டம் ரூ.250 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும். தமிழக நெடுஞ்சாலைத்துறையில் பெரிய பிரச்சனையே பேட்ச் ஒர்க் தான். 30-40% இதில் தான் நிதி செலவிடப்படுகிறது. ஒரு காண்ட்ராக்டர் டெண்டர் எடுத்து விட்டு குறைந்தப்பட்சம் 5,6 ஆண்டுகள் தரமான சாலை கொடுக்க வேண்டும் என சொல்கிறோம். அதே சாலைகளுக்கு நிதி செலவிடுகிறோம். பேட்ச் ஒர்க்கில் மிகப்பெரிய ஊழல் நடந்திருக்கிறது. அவையெல்லாம் வெள்ளை அறிக்கையில் அவை விரிவாக இடம்பெறும் எனவும் ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல் புதிய மேம்பாலங்கள், இணைப்புச் சாலைகள், புறவழிச்சாலைகளுக்கான திட்ட அறிக்கைகள் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் தயாரிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.