தமிழக கேரள எல்லையில் 152 அடி உயரம் கொண்ட முல்லைப் பெரியாறு அணை உள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட ஐந்து மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் விவசாய நீர்ப்பாசன ஆதாரமாகவும் இந்த முல்லைப் பெரியாறு அணை உள்ளது. இந்த நிலையில் கேரள மாநிலத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால் முல்லைப் பெரியாறு அணையின் நீர் பிடிப்பு பகுதியில் நேற்று இரவு முதல் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்து நேற்று 326 கன அடியாக இருந்த நிலையில், இன்று அணைப் பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக அணைக்கு வரும் நீர்வரத்து ஆயிரத்து 2294 கன அடியாக அதிகரித்துள்ளது. மேலும் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 456 கனஅடியாகவும், அணையின் மொத்த நீர் இருப்பு இரண்டாயிரத்து 2806 மில்லியன் கன அடியாகவும் உள்ளது. தற்போது 152 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் 120.90 அடியாக இருந்து வருகிறது. இதனைத் தவிர்த்து, அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் இன்றும் மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதால் நீர்வரத்து மேலும் அதிகரிக்க கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, முல்லை பெரியாற்றின் கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும் பொதுப்பணி துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Fake Court: போலி சுங்கச்சாவடி, போலி ரூபாய் நோட்டு போல இப்போ போலி நீதிமன்றம்: குஜராத் சம்பவங்கள்!

இதேபோல் தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் உள்ள மஞ்சளார் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி மற்றும் பாலமலை, பெருமாள்மலை, பண்ணைக்காடு, வடகரபாறை உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று மாலை நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து 168 கன அடியாக இருந்த நிலையில், நீர் பிடிப்பு பகுதிகளில் இரவு பெய்த கனமழையால் அனணக்கு நீர்வரத்து 322 கன அடியாக அதிகரித்துள்ளது .

Breaking News LIVE: பாஜகவை வலுப்படுத்த தனது வாழ்நாளை அர்ப்பணித்தவர் அமித் ஷா: பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து

அணையின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவான 57 அடியில் 55 அடியை எட்டி ஏற்கனவே பாசனத்திற் 100 கன அடி நீர் திறக்கப்பட்டு இருந்த நிலையில், மஞ்சளார் ஆற்றில் உபரி நீர் திறப்பு 168 கனஅடியில் இருந்து 291 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் 40 கனஅடி நீர் புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு வாய்க்காலில் திறக்கப்பட்டுள்ளது.

மஞ்சளார் அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் பட்சத்தில் அப்படியே மஞ்சளார் ஆற்றில் திறந்து விடப்படும் சூழ்நிலை உள்ளதால் மஞ்சளார் ஆற்றங்கரையோர பகுதியிலான தேனி, திண்டுக்கல் மாவட்டங்களை சேர்ந்த கெங்குவார்பட்டி, ஜி. கல்லுப்பட்டி, வத்தலகுண்டு, விருவீடு உள்ளிட்ட ஆற்றங்கரையோர மக்களுக்கு பொதுப்பணித்துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தேனி மாவட்டத்தில் மற்ற அணைகளின் இன்றைய நிலவரம்.

வைகை அணை

நிலை- 57.91 (71)அடி
கொள்ளளவு: 3212Mcft
நீர்வரத்து: 2360கனஅடி
வெளியேற்றம் : 806குசெக்வெசிட்டி:2511 Mcft

சோத்துப்பாறை அணை:

நிலை- 126.28(126.28) அடி
கொள்ளளவு: 100Mcft
நீர்வரத்து: 52.30 கனஅடி
வெளியேற்றம்: 52.30 கனஅடி

சண்முகநதி அணை:

நிலை-45.10 (52.55)அடி
கொள்ளளவு: 58.41Mcft
வரத்து: 3 கனஅடி
வெளியேற்றம்: 0 கியூசெக்.