H-1B Visa: இந்தியர்கள் ஷாக்..! H-1B, H-4 விசாக்கள் தாமதமாகும் - காரணத்தை சொன்ன அமெரிக்க தூதரகம்

2 hours ago 1
ARTICLE AD

H-1B Visa US Embassy: மேம்படுத்தப்பட்ட சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் காரணமாக H-1B மற்றும்  H-4 விசாவிற்கான விண்ணப்பங்கள் மீதான பரிசீலனை தாமதமாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

”H-1B விசா பரிசீலனை தாமதமாகும்”

அமெரிக்கா அரசாங்கம் தனது H-1B மற்றும்  H-4 விசாவிற்கான விண்ணப்பதாரர்களின், சமூக வலைதள செயல்பாடுகள் எப்படி உள்ளது என்பதை தீவிரமாக ஆராயும் புதிய நடவடிக்கையை கட்டாயமாக்கியுள்ளது. மேற்குறிப்பிட்ட இரண்டு விசாக்களுக்கு விண்ணப்பிக்கும் அனைத்து நாடுகளைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கும் இது பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் வெளியிடுள்ள அறிக்கையில், “முடிந்த வரையில் விரைவில் விண்ணப்பியுங்கள், விசாவிற்கான பரிசீலனை என்பது கூடுதல் நேரத்தை எடுத்துக் கொள்ளும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது விண்ணப்பங்கள் மீதான பரிசீலனை தாமதமாகும் என எச்சரித்துள்ளது.

சமூக வலைதள மதிப்பாய்வுகள்

இந்தியாவில் இந்த மாத இறுதியில் திட்டமிடப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான H-1B விசா விண்ணப்பதாரர்களின் ஏற்கனவே திட்டமிடப்பட்ட நேர்காணல்கள், பல மாதங்களுக்கு திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ள நேரத்தில் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது. அதில், ”H-1B மற்றும் H-4 விசா விண்ணப்பதாரர்களுக்கான உலகளாவிய எச்சரிக்கை. டிசம்பர் 15 முதல், நிலையான விசா பரிசீலனையின் ஒரு பகுதியாக, அனைத்து H-1B மற்றும் H-4 விண்ணப்பதாரர்களின் சமூகவலைதள செயல்பாடுகளை மதிப்பிடுவதை வெளியுறவுத்துறை விரிவுபடுத்தியுள்ளது. H1-B மற்றும் H-4 விசாக்களுக்கான அனைத்து நாட்டினரையும் சேர்ந்த அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் இந்த சரிபார்ப்பு உலகளவில் நடத்தப்படுகிறது" என்று அமெரிக்க தூதரகம் சமூக வலைதள பதிவில் தெரிவித்துள்ளது.

புதிய நடைமுறைக்கான காரணம் என்ன?

புதிய நடைமுறையால் ஏராளமான விண்ணப்பதாரர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், H1B விசாவில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்கவே இந்த நடவடிக்கை தொடரப்பட்டுள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், வெளிநாட்டைச் சேர்ந்த சிறந்த தொழிலாளர்களில் சிறந்தவர்களை பணியமர்த்த நிறுவனங்களை தொடர்ந்து அனுமதிப்பதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இந்தியர்கள் ஷாக்:

H-1B விசா திட்டத்தை அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் வெளிநாட்டு தொழிலாளர்களை,  வேலைக்கு அமர்த்த பரவலாகப் பயன்படுத்துகின்றன. தொழில்நுட்ப ஊழியர்கள் மற்றும் மருத்துவர்கள் உள்ளிட்ட பிரிவில், H-1B விசா வைத்திருப்பவர்களின் எண்ணிக்கையில் இந்தியர்கள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றனர். இந்நிலையில் தான் H-1B விசா திட்டத்தின் துஷ்பிரயோகம் மற்றும் சட்டவிரோத குடியேற்றத்தை சரிபார்க்க அமெரிக்கா கடுமையான நடவடிக்கைகளைத் தொடங்கிய நேரத்தில் இந்த அறிக்கையும் வந்துள்ளது.

புதிய அமெரிக்க கொள்கைகள் காரணமாக நூற்றுக்கணக்கான இந்தியர்கள் விசா தாமதங்களை எதிர்கொள்கின்றனர். மேம்படுத்தப்பட்ட சரிபார்ப்பு நடவடிக்கைகளைக் கருத்தில் கொண்டு, H-1B விசா விண்ணப்பதாரர்களுக்கான திட்டமிடப்பட்ட நேர்காணல்களை பெருமளவில் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ஏற்கனவே அங்கு வேலைபார்த்துவிட்டு நாடு திரும்பியவர்கள் அமெரிக்காவிற்கு வேலைக்காக திரும்பிச் செல்ல செல்லுபடியாகும் H1B விசா இல்லாமல் தவித்து வருகின்றனர். உதாரணமாக, டிசம்பர் 15 ஆம் தேதி நேர்காணல் திட்டமிடப்பட்டிருந்தவர்களுக்கு மார்ச் மாதத்தில் மறு தேதி ஒதுக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 19 ஆம் தேதி சந்திப்பு திட்டமிடப்பட்டிருந்த விண்ணப்பதாரர்களுக்கு மே மாத இறுதியில் புதிய தேதிகள் வழங்கப்பட்டுள்ளன.

Read Entire Article