Admk Bjp Alliance: 45 தொகுதி வேணும்.. அடம்பிடிக்கும் பாஜக.! பிடி கொடுக்காத இபிஎஸ்- இன்று எடுக்கப்போகும் முடிவு என்ன.?

2 hours ago 1
ARTICLE AD

தேர்தலுக்கு தயாராகும் தமிழகம்

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலை எதிர்நோக்கி அரசியல் கட்சிகள் காய்நகர்த்தி வருகிறது. அந்த வகையில் திமுக- அதிமுக- தவெக- நாம் தமிழர் என 4 முனை போட்டியானது தற்போது வரை உறுதியாகியுள்ளது. இந்த நிலையில் பலம் வாய்ந்த கூட்டணியோடு தேர்தலை எதிர்கொள்ள திமுக தயாராகி வருகிறது. இதற்கு டப் கொடுக்கும் வகையில் எதிர்கட்சியான அதிமுகவும் திட்டமிட்டு வருகிறது. அந்த வகையில் முதல்கட்டமாக எதிர்ப்பு வாக்குகளை ஒருங்கிணைக்க பாஜகவை தங்கள் கூட்டணியில் இணைத்துள்ளது. அடுத்ததாக தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இன்னும் ஒரு மாத காலத்திற்குள் கூட்டணி தொடர்பாக முக்கிய முடிவை இந்த இரண்டு கட்சிகளும் அறிவிப்பதாக தெரிவித்துள்ளது.

45 தொகுதிகளை டார்கெட் வைத்த பாஜக

இந்த நிலையில் இந்தியாவில் பல மாநிலங்களில் ஆட்சியை பிடித்த பாஜக, தமிழத்தில் மட்டும் முடியாத காரியமாக உள்ளது. பல ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக  உதவியோடு சட்டமன்றத்தில் 4 எம்எல்ஏக்களோடு உள்ளே நுழைந்துள்ளது. இந்த 4 எம்எல்ஏக்களை 40க்கும் மேல் அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக கடந்த 2ஆண்டுகளுக்கு மேலாக களப்பணியை தீவிரப்படுத்தியுள்ளது. குறிப்பாக பாஜக செல்வாக்கு உள்ள தொகுதிகளை கண்டறிந்து வருகிறது. அதன் படி முதல் கட்டமாக 60 தொகுதிகளை தேர்ந்தெடுத்த நிலையில் தற்போது வெற்றிக்கு அதிக வாய்ப்புள்ள மைலாப்பூர், தி.நகர், கோவை, திருப்பூர், ஊட்டி, நாகர்கோவில் உள்ளிட்ட 45 தொகுதிகளை டார்கெட் செய்துள்ளது.

கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு

ஆனால் அதிமுக தரப்பில் 25 தொகுதிகளுக்ககு மேல் கொடுக்க வாய்ப்பு இல்லையென உறுதியாக உள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பாஜகவிற்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இதில் 4 தொகுதிகளில் வெற்றி பெற்றது. எனவே இந்த முறை தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சி அதிகரித்துள்ள காரணத்தால் 45 தொகுதிகளை கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக பாஜகவை நம்பியுள்ள மற்ற கட்சிகளான ஏசி சண்முகம், பாரிவேந்தர், ஜான் பாண்டியன், கிருஷ்ணசாமி ஆகியோருக்கும் தொகுதிகள் ஒதுக்கப்படும் என கூறப்படுகிறது.

தமிழகம் வரும் பியூஸ் கோயல்

இந்த பரபரப்பான சூழ்நிலையில் கடந்த 2019 மற்றும் 2021ஆம் ஆண்டு தேர்தல்களில் தமிழக தேர்தல் பொறுப்பாளாரக இருந்த பியூஸ் கோயல் மீண்டும் தேர்தல் பொறுப்பாளராக நியமித்துள்ளது. இதனையடுத்து இன்று காலை தமிழகம் வரும் பியூஸ் கோயல், பாஜக நிர்வாகிகளோடு ஆலோசனை மேற்கொள்கிறார். அடுத்தாக தமிழக ஆளுநர் ரவியை சந்தித்து பேசுகிறார். இதனையடுத்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியோடு இன்று மாலை ஆலோசனை நடத்தவுள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தில் அதிமுக- பாஜக கூட்டணியை வலுப்படுத்துவது, புதிய கட்சிகளை கூட்டணியில் இணைப்பது தொடர்பாக ஆலோசிக்கப்படவுள்ளது.

இபிஎஸ்- பியூஸ் கோயல் பேச்சுவார்த்தை

மேலும் கடந்த முறையை விட இந்த முறை பாஜகவிற்கு அதிக தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என வலியுறுத்துவார் என கூறப்படுகிறது. ஆனால் கடந்தமுறை பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டதை போல 20 தொகுதிகள் மட்டுமே ஒதுக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே இன்றைய கூட்டத்தில் தேர்தலை எதிர்கொள்ள அடுத்த கட்ட வியூகம் தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்படும் என கூறப்படுகிறது.

Read Entire Article