'படியில் பயணம் நொடியில் மரணம்' ரயிலில் பயணித்த இளைஞர் தவறி விழுந்து பலி

11 months ago 8
ARTICLE AD

விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் அருகே புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் நோக்கி வந்த இரயிலில் பயணித்த இளைஞர் தவறி விழுந்து உயிரிழப்பு, உடலை கைப்பற்றி வளவனூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

படியில் பயணம்:

புதுச்சேரி மாநிலம் புதுநகர், செல்லியமேடு பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன் ( வயது 39), இவர் புதுச்சேரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு சபரிமலைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து கிளம்பிய பாலமுருகன் புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் நோக்கி வரும் பயணிகள் இரயிலில் பயணம் செய்துள்ளார். இரயில் விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் அடுத்த பணங்குப்பம் பகுதியில் சென்ற போது பாலமுருகன் ரயிலில் இருந்து தவறி விழுந்து தலை சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதையும் படிங்க: லக்கி பாஸ்கர் இயக்குநருடன் இணையும் சூர்யா...சூரரைப் போற்று ஸ்டைலில் கதை

போலீஸ் விசாரணை:

காலையில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் தண்டவாளம் அருகே ஒருவர் இறந்து கிடப்பதாக வளவனூர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்த நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற வளவனூர் காவல்துறையினர் பாலமுருகன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இளைஞர் உயிரிழப்பு குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: Ford : ஃபோர்டு நிறுவனம் திடீர் ட்விஸ்ட்.. முதலமைச்சர் முயற்சி வெற்றி.. மார்ச்சில் குறிக்கப்பட்ட தேதி..

ஆபத்தான பயணம்:

காலை, மற்றும் மாலை நேரங்களில், பஸ்களில் வந்து செல்லும் இளைஞர்கள் பலர், படிக்கட்டுகளில் தொங்கல் பயணம் மேற்கொள்கின்றனர். புதுச்சேரி  பகுதியில் ஏற்கனவே அதிகப்படியான வாகன விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன. பள்ளி, கல்லுாரி மாணவர்கள், இளைஞர்கள் பலர், இதுபோல் ஆபத்தான பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

'படியில் பயணம்; நொடியில் மரணம்' என, பெரும்பாலான பஸ்களிலும் வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன; ஆனாலும், விழிப்புணர்வு இன்றி படிக்கட்டு பயணம் தொடர்கிறது. படிக்கட்டு பயணத்தால் எண்ணற்ற விபத்துகள் கடந்த காலங்களில் ஏற்பட்டுள்ளன.

Read Entire Article