நைலான் கயிறால் முடிந்த உயிர்! மனைவியை கொடூரமாகக் கொன்ற கணவன் - பின்னணி காரணம் என்ன?

3 months ago 6
ARTICLE AD

சேலம்: திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாக சந்தேகமடைந்த கணவன், மனைவியை நைலான் கயிறால் கழுத்தை நெறித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தப்பியோடிய கணவனை போலீசார் தேடி வருகின்றனர்.

சேலம் மாநகர் களரம்பட்டி அடுத்துள்ள சலவையாளர் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன். அவரது மனைவி ஜெயந்தி (40). திருமணமாகி இரண்டு பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இருவரும் இணைந்து குகைப் பகுதியில் சமோசா கடை நடத்தி வருகின்றனர்.

இந்தநிலையில், இன்று காலை 10:30 மணிக்கு மகேந்திரன் மற்றும் ஜெயந்தி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஒருவருக்கு ஒருவர் தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து மகேந்திரன் வீட்டிலிருந்த நைலான் கயிறை எடுத்து ஜெயந்தி கழுத்தில் சுற்றி கொலை செய்ய முயன்றுள்ளார். ஜெயந்தியின் அலறல் சத்தம் கேட்டதும் அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து ஜெயந்தியை காப்பாற்ற முயன்றுள்ளனர். ஆனால் அதற்கு முன்பாகவே அவர் உயிரிழந்துள்ளார். உடனடியாக கிச்சிப்பாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த விசாரணையில், ஜெயந்தி திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாக சந்தேகத்தில் மகேந்திரன் கொலை செய்ததாக தெரியவந்துள்ளது. தலைமறைவாக உள்ள மகேந்திரனை கிச்சிப்பாளையம் காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

Read Entire Article