தொகுதி மறுவரையறை தென்னிந்தியாவிற்கே மிகப்பெரிய பேராபத்து: அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை!

2 months ago 6
ARTICLE AD

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சட்டமன்ற தொகுதி மரக்காணம் ஒன்றியத்திற்கு உட்பட்ட எம்.புதுப்பாக்கம் ஊராட்சி மற்றும் கூனிமேடு ஊராட்சி ஆகிய பகுதிகளில் ரூ.92.90 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட 2 புதிய அங்கன்வாடி மைய கட்டிடங்களின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு கலந்துகொண்டு புதிய கட்டிடங்களை திறந்து வைத்தார்.

தொடர்ந்து கூனிமேடு திடீர் நகர் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர், அப்பகுதி மக்களுக்கு மின்சார வசதி மற்றும் பட்டா வழங்குவது குறித்து மாவட்ட கலெக்டரிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார். உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என அப்பகுதி மக்களிடம் உறுதியளித்தார்.

அதனைத் தொடர்ந்து மரக்காணம் அருகே உள்ள ஆட்சிக்காடு கிராமத்தில் சுடுகாட்டிற்கு பாதை இல்லாமல் தவித்து வந்த பொதுமக்களுக்கு, மரக்காணம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் தயாளன் தனது சொந்த செலவில் நிலத்தை வாங்கி தானமாக வழங்கிய இடத்தில், சாலை அமைப்பதற்காக ஆய்வு மேற்கொண்டு உடனடியாக சாலை அமைக்க துறை சார்ந்த அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.

பின்னர் மரக்காணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அமைச்சர் வன்னி அரசு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

திண்டிவனம் தொகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட அங்கன்வாடி கட்டிடங்கள் திறந்து வைக்கப்பட்டு, பொதுமக்களின் கோரிக்கைகள் குறித்து ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் திண்டிவனத்தில் உள்ள ஏரிகளை தூர்வாரும் பணிகள் மாலை வேளையில் தொடங்கப்பட உள்ளன. இத்தொகுதியை மேலும் வளப்படுத்துவதிலும், மேம்படுத்துவதிலும் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்தவுடன், தொகுதி மக்களுக்கான அனைத்து வளர்ச்சித் திட்ட பணிகளும் தீவிரமாக செயல்படுத்தப்படும்.

தொகுதி மறுவரையறை, காவிரி விவகாரம்

காவிரி பிரச்சனை மற்றும் தொகுதி மறுவரையறை ஆகிய இரண்டுமே முக்கியமான விவகாரங்கள். குறிப்பாக மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்வது தென்னிந்தியாவிற்கே மிகப்பெரிய ஆபத்தாக முடியும். வடமாநிலங்களை மட்டுமே மையமாக வைத்து ஆட்சி அமைக்கும் நிலையை உருவாக்கவே இத்தகைய திட்டங்கள் கொண்டுவரப்படுகின்றன.

மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யக்கூடாது என்பதே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தெளிவான நிலைப்பாடு. தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்டுள்ள 39 மக்களவை தொகுதிகளும் அப்படியே தொடர வேண்டும்.

அதேபோல் காவிரி விவகாரத்தில் மேகதாது அணை கட்டக்கூடாது என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. இது தொடர்பாக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. இதில் எந்தவித நாடகமும் இல்லை.

பஞ்சமி நிலங்கள் மீட்பு

தமிழகத்தில் உள்ள பஞ்சமி நிலங்களை கண்டறிந்து மீட்டெடுக்க தனியாக ஆணையம் அமைக்க வேண்டும் என்று முதல்-அமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. கணக்கெடுப்பு பணிகள் முடிந்தவுடன் பஞ்சமி நிலங்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும்.

சிறைத்துறை மற்றும் மனித உரிமைகள்

சிறையில் கைதிகள் உயிரிழப்பது கவலையளிக்கிறது. காவலர்களின் கட்டுப்பாட்டில் உள்ளவர்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு காவல்துறைக்கும் சிறைத்துறைக்கும் உள்ளது. மனித உரிமை மீறல்கள் யார் செய்தாலும் தவறாகும். சட்டமும் காவல்துறையும் மனித உரிமைகளை பாதுகாக்க பொறுப்புடன் செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Read Entire Article