தேசிய அளவில் யோகா போட்டியில் தங்கம் வென்ற கரூர் மாணவர் - ஊர் மக்கள் உற்சாக வரவேற்பு

11 months ago 7
ARTICLE AD

ஒடிசா மாநிலத்தில் நடைபெற்ற பல்கலைக்கழகங்களுக்கான தேசிய அளவிலான யோகா போட்டியில் தங்கப்பதக்கம் வென்று, கரூர் வந்த மாணவருக்கு ஊர் பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் பட்டாசு வெடித்து, மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட வாங்கப்பாளையம், தங்க நகர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணியம். இவர் எல்.ஐ.சி முகவர், இவரது மனைவி கலைவாணி, இவர்களுக்கு கபிலன் என்ற மகன் உள்ளார். இவர் சிறு வயது முதலே யோகாசன பயிற்சிகளில் ஆர்வத்துடன் பங்கேற்று பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்று ஏராளமான பதக்கங்களையும், கோப்பைகளையும், சான்றிதழ்களையும் பெற்றுள்ளார். இதன் காரணமாக விளையாட்டு பிரிவில் எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தின் மூலம் தேர்வாகி சென்னையில் உள்ள அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரியில் இளங்கலை யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்பில் சேர்ந்து மருத்துவம் படித்து வருகிறார்.

ஒடிசா மாநிலம், புவனேஸ்வரில் உள்ள கே.ஐ.ஐ.டி பல்கலைக்கழகத்தில் கடந்த 23ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை இந்திய அளவிலான யோகாசன போட்டிகள் நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர். இந்த போட்டியில் தமிழ்நாடு சார்பாக பல்கலைக்கழகத்தின் மூலம் மாணவர் கபிலனும் தேர்வாகி, அங்கு பாரம்பரிய யோகாசன பிரிவில் நடைபெற்ற போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார்.

இந்த நிலையில் இந்திய அளவிலான யோகாசனப் போட்டியில் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் வென்று, இன்று கரூர் திரும்பிய மாணவர் கபிலனை வரவேற்கும் விதமாக வாங்கப்பாளையம், தங்க நகர் பகுதியில் ஊர் பொதுமக்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் சார்பாக பட்டாசு வெடித்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாணவர் கபிலனுக்கு அனைவரும் மாலை மற்றும் சால்வைகள் அணிவித்து பாராட்டு தெரிவித்தனர்.

சிறுவயதில் கபிலனுக்கு மூச்சு பிரச்சனை இருந்த நிலையில், தொடர்ந்து யோகாசனம் செய்து வந்ததால், அந்த பிரச்சனையில் இருந்து முழுமையாக குணமடைந்ததாகவும், யோகாசனத்தின் மூலம் மன அமைதி கிடைக்கும் என்றும், யோகாசன பயிற்சியாளர் நாச்சிமுத்து தெரிவித்தார்.

Read Entire Article