தெருவுக்கு அஸ்வின் பெயர்.. பெருமைப்படுத்திய சென்னை மாநகராட்சி.. சிஎஸ்கே ரசிகர்கள் ஹேப்பி!

9 months ago 5
ARTICLE AD

முன்னாள் கிரிக்கெட் வீரர் அஸ்வினை பெருமைப்படுத்தும் வகையில் சென்னை மாநகராட்சி முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளது. அவர் வசிக்கும் தெருவுக்கு அவரின் பெயரை வைக்க முடிவு செய்துள்ளது. மேற்கு மாம்பலம் ராமகிருஷ்ணபுரம் முதல் தெருவுக்கு அஸ்வின் பெயர் வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பெயர் சூட்டும் நிகழ்ச்சி விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இனி ராமகிருஷ்ணபுரம் முதல் தெரு அல்ல.. அஸ்வின் முதல் தெரு

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வின். தமிழ்நாட்டைச் சேர்ந்த இவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் 500க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். டெஸ்ட் மட்டுமின்றி ஒருநாள், டி20 போட்டிகளிலும் இந்திய அணிக்காக பல முறை வெற்றியைத் தேடி தந்துள்ளார். சமீபத்தில், அனைத்து விதமான சர்வதேச போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றுள்ளார்.

இந்த நிலையில், உலக கிரிக்கெட் அரங்கில் தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்த அஸ்வினை கெளரவிக்கும் வகையில் அவர் வசிக்கும் தெருவுக்கு அவரின் பெயரை வைக்க வேண்டும் என சென்னை மாநகராட்சியிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

மேற்கு மாம்பலத்தில் உள்ள ஆர்யா கவுடா சாலைக்கோ அல்லது அஸ்வின் வசிக்கும் ராமகிருஷ்ணபுரம் முதல் தெருவுக்கோ அவரது பெயர் வைக்க வேண்டும் என கேரம் பால் ஈவென்ட் அண்ட் மார்க்கெட்டிங் கம்பெனி பிரைவேட் லிமிடெட் (அஸ்வினுக்கு சொந்தமான நிறுவனம்) சார்பில் சென்னை மாநகராட்சியிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்த கோரிக்கையை பரிசீலனை செய்த சென்னை மாநகராட்சி, ராமகிருஷ்ணபுரம் முதல் தெருவுக்கு அஸ்வின் பெயர் சூட்ட முடிவு எடுத்துள்ளது. பெயர் சூட்டும் நிகழ்ச்சி விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சாதனை நாயகன் அஸ்வின்:

இதுவரை 106 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 537 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார் அஸ்வின். அதிகபட்சமாக ஒரு போட்டியில் 140 ரன்களை விட்டுக்கொடுத்து 13 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஒரு இன்னிங்சில் 59 ரன்களை விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 200 இன்னிங்சில் பந்துவீசியுள்ளார்.

இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் 37 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 8 முறை 10 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 116 ஒருநாள் போட்டிகளில் ஆடி  156 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 65 டி20 போட்டிகளில் ஆடி 72 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

பேட்ஸ்மேனாகவும் கலக்கிய அஸ்வின், டெஸ்ட் போட்டிகளில் 6 சதங்கள், 14 அரைசதங்கள் விளாசியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 151 இன்னிங்சில் பேட்டிங் செய்து 3 ஆயிரத்து 503 ரன்கள் எடுத்துள்ளார். ஒருநாள் போட்டியில் 1 அரைசதத்துடன் 707 ரன்கள் எடுத்துள்ளார். டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக 184 ரன்கள் எடுத்துள்ளார். சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும், ஐபிஎல் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வருகிறார்.

Read Entire Article