தெருவிளக்குகள் எரியலை... விஷபூச்சிகள் அச்சத்தால் தவிக்கும் சிவகாமிபுரம் மக்கள்

2 months ago 4
ARTICLE AD

தஞ்சாவூர்: தஞ்சாவூர் அருகே சிவகாமிபுரத்தில் தெருவிளக்குகளால் எரியாததால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுனர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

தஞ்சை மாவட்டம் சிவகாமிபுரம் வழியாக ஆலக்குடி, வண்ணாரப்பேட்டை, புதுகல்விராயன்பேட்டை, சித்திரக்குடி, பூதலூர், திருக்காட்டுப்பள்ளி பகுதிகளுக்கு தினமும் ஆயிரக்கணக்கான இருசக்கர வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும் பால் வேன்,  கேஸ் சிலிண்டர் வேன், லாரி உட்பட சரக்கு ஏற்றிச் செல்லும் வாகனங்களும் தினமும் நூற்றுக்கணக்கில் சென்று வருகின்றன. மேலும் தஞ்சாவூரில் பணி முடிந்து ஆலக்குடி, வண்ணாரப்பேட்டை, கல்விராயன்பேட்டை, சித்திரக்குடி, பூதலூர் பகுதிகளில் உள்ள தங்களின் வீடுகளுக்கு செல்ல அதிகமானோர் இருசக்கர வாகனத்தில் செல்கின்றனர்.

இதனால் சிவகாமிபுரத்தில் இரவு நேரத்தில் போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும். இந்நிலையில் சிவகாமிபுரத்தில் உள்ள தெரு விளக்குகள் சரிவர எரிவதில்லை. ஒரு நாள் தெருவிளக்குகள் எரிந்தால் அடுத்த சில நாட்களுக்கு இருண்டுதான் போய் விடுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் அவதிக்கும் அச்சத்திற்கும் உள்ளாகி வருகின்றனர்.

சிவகாமிபுரம் கிராமத்தைச் சுற்றி பரந்து விரிந்த விவசாய வயல்வெளிகள் அதிகம் அமைந்துள்ளன. தற்போது வெயில் தாக்கம் கடுமையாக இருந்து வரும் நிலையில், வழக்கத்தை விட விஷப்பூச்சிகள், பாம்புகள் மற்றும் தேள்களின் நடமாட்டம் கிராம குடியிருப்பு பகுதிகளை நோக்கி அதிகளவில் அதிகரித்துள்ளது.

இத்தகைய சூழலில், கிராமத்தின் முக்கியத் தெருக்களில் உள்ள மின் விளக்குகள் தொடர்ந்து எரிவதில்லை. இரவு நேரங்களில் தெருக்கள் முழுமையாக இருளில் மூழ்கிப் போவதால், அத்தியாவசியத் தேவைகளுக்காக வீட்டை விட்டு வெளியே வரும் பொதுமக்கள் சாலையில் நடந்து செல்லவே பெரும் அச்சமடைந்து வருகின்றனர். குறிப்பாக, இருட்டில் தரையில் ஊர்ந்து வரும் விஷப்பூச்சிகள் மற்றும் பாம்புகள் கண்ணுக்குத் தெரியாததால், மிதித்துவிடக் கூடும் என்ற பயத்துடனேயே மக்கள் உள்ளனர்.

மாலை பொழுது சாய்ந்ததுமே கிராமம் முழுவதும் இருள் சூழ்ந்து விடுவதால், பள்ளி, கல்லூரி முடித்து தாமதமாக வீடு திரும்பும் மாணவ-மாணவிகள், இரவு நேரப் பணிகளுக்குச் சென்று திரும்புபவர்கள் மற்றும் பெண்கள் பாதுகாப்பற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். மேலும், முதியவர்கள் மற்றும் குழந்தைகள் இருட்டில் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடையும் சம்பவங்களும் தொடர்கதையாகி வருகின்றன.

கிராமத்தின் இந்த அடிப்படை மின்சாரப் பிரச்சினை குறித்து மின்வாரியத்திற்கு பலமுறை கிராம மக்கள் சார்பில் புகார் அளித்தும் எந்தவிதத் துரித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனப் பொதுமக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

எனவே, ஏதேனும் அசம்பாவித சம்பவங்களோ அல்லது உயிரிழப்புகளோ ஏற்படுவதற்கு முன்பாக, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு, சிவகாமிபுரம் கிராமத்தில் தெரு விளக்குகள் தொடர்ந்து எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். குழந்தைகள், பெண்கள் சாலையில் நடந்து செல்ல அச்சப்படுகின்றனர். எனவே காலம்தாழ்த்தாமல் சிவகாமிபுரத்தில் தெருவிளக்குகள் இரவு நேரத்தில் தொடர்ந்து எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் இப்பகுதி வழியாக இருச்சக்கர வாகனங்களில் செல்பவர்கள் கூறுகையில், இந்த சிவகாமிபுரம் வழியாகதான் இரவு நேரத்தில் எங்கள் ஊர்களுக்கு செல்ல வேண்டும். இருள் சூழ்ந்து இருப்பதால் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகிறோம். எனவே இப்பகுதியில் தெரு விளக்குகளை எரிய விட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

Read Entire Article