'துரந்தர்' உலக சாதனை... இந்த ஆண்டில் நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட Non-English திரைப்படம்!

2 months ago 5
ARTICLE AD

இந்த ஆண்டில் உலகம் முழுவதும் நெட்ஃப்ளிக்ஸில் அதிகம் பார்க்கப்பட்ட ஆங்கிலம் அல்லாத (Non-English) திரைப்படமாக 'துரந்தர்' (Dhurandhar) உருவெடுத்துள்ளதாக நெட்ஃப்ளிக்ஸ் இணை தலைமை நிர்வாக அதிகாரி (Co-CEO) டெட் சரண்டோஸ் (Ted Sarandos) தெரிவித்துள்ளார். இந்திய பொழுதுபோக்கு உள்ளடக்கங்களுக்கு உலகளவில் கிடைத்து வரும் வரவேற்பு குறித்து அவர் வெளியிட்டுள்ள தகவல்கள் கவனம் பெற்றுள்ளன.

சாதனை படைத்த துரந்தர்

சர்வதேச நிகழ்ச்சியில் பேசிய டெட் சரண்டோஸ், "'துரந்தர்' இந்த ஆண்டில் உலகம் முழுவதும் அதிகம் பார்க்கப்பட்ட Non-English திரைப்படம். பார்வையாளர்கள் எண்ணிக்கையில் அனைத்து ஆங்கில மொழித் திரைப்படங்களையும் பின்னுக்குத் தள்ளியுள்ளது. அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து தயாரிப்புகளுக்கு அடுத்தபடியாக இந்திய உள்ளடக்கங்களே அதிகம் பார்க்கப்பட்டுள்ளன" என்று கூறினார்.

மேலும், இந்திய திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்களின் உலகளாவிய வளர்ச்சி தொடர்ந்து நிலைத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். 2024-ம் ஆண்டு முதல் இதுவரை ஒவ்வொரு வாரமும் நெட்ஃப்ளிக்ஸின் Global Top 10 பட்டியலில் குறைந்தது ஒரு இந்திய திரைப்படம் அல்லது வெப் தொடர் இடம்பெற்று வருகிறது என்று அவர் தெரிவித்தார். இந்திய உள்ளடக்கங்களுக்கு உலகம் முழுவதும் தொடர்ந்து கிடைத்து வரும் வரவேற்பை இந்த புள்ளிவிவரம் வெளிப்படுத்துவதாகவும் அவர் கூறினார்.

இந்த வெற்றிக்கு நெட்ஃப்ளிக்ஸின் பரிந்துரை அல்காரிதமும் முக்கிய காரணமாக இருப்பதாக டெட் சரண்டோஸ் விளக்கினார். பார்வையாளர்களின் ரசனை மற்றும் பார்வை பழக்கத்தின் அடிப்படையில், அவர்கள் விரும்பக்கூடிய திரைப்படங்கள் மற்றும் தொடர்களை உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள பயனர்களுக்கு அல்காரிதம் பரிந்துரைக்கிறது. இதன் மூலம் மொழி எல்லைகளைத் தாண்டி இந்திய உள்ளடக்கங்கள் புதிய பார்வையாளர்களை சென்றடைகின்றன என்று அவர் குறிப்பிட்டார்.

இதனுடன், இந்த ஆண்டு மட்டும் உலகம் முழுவதும் நெட்ஃப்ளிக்ஸில் இந்திய திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்களை பார்வையாளர்கள் 3.5 பில்லியன் மணி நேரத்திற்கும் அதிகமாக பார்த்துள்ளதாகவும் டெட் சரண்டோஸ் தெரிவித்தார். இந்திய உள்ளடக்கங்களின் பார்வை நேரம் தொடர்ந்து அதிகரித்து வருவது, உலகளாவிய சந்தையில் இந்திய திரைப்படங்கள் மற்றும் தொடர்களின் தாக்கம் வலுவடைந்து வருவதைக் காட்டுவதாக அவர் கூறினார்.

'துரந்தர்' திரைப்படத்தின் சாதனை மட்டுமல்லாமல், தொடர்ந்து Global Top 10 பட்டியலில் இந்திய திரைப்படங்கள் மற்றும் தொடர்கள் இடம்பிடித்து வருவதும், இந்திய உள்ளடக்கங்களுக்கான சர்வதேச வரவேற்பு புதிய உயரத்தை எட்டியிருப்பதை இந்த புள்ளிவிவரங்கள் உறுதிப்படுத்துகின்றன.

Read Entire Article