திருச்செந்தூர் கும்பாபிஷேக விழாவிற்கு போறீங்களா.. உங்களுக்கான செய்தி தான் !

5 months ago 5
ARTICLE AD

குடமுழுக்கு விழா அறிவிப்பு வெளியானது முதலே திருச்செந்தூர் வழக்கத்தை விட கூடுதலாக களைகட்டி காணப்படுகிறது.

திருச்செந்தூர் கும்பாபிஷேக சிறப்பு ரயில்

தமிழ் கடவுள் என்று பக்தர்களால் கொண்டாடப்படும் கோலாலகமாக கொண்டாடப்படும் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றாக திருச்செந்தூர் உள்ளது. கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ள இந்த அறுபடை வீட்டிற்கு ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் குவிந்து முருகனை தரிசிப்பது வழக்கம். திருச்செந்தூர் கோயிலுக்கு சென்றுவந்தால் நினைத்த காரியங்கள் நிறைவேறும். என்பது முருக பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

திருச்செந்தூர் கும்பாபிஷேகம்:

இந்த நிலையில், திருச்செந்தூர் கோயிலில் வரும் 7் தேதி குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. அன்றைய நாள் காலை 6.15 மணி முதல் காலை 6.50 மணிக்குள் இந்த கும்பாபிஷேக விழா நடக்கிறது. குடமுழுக்கு விழா அறிவிப்பு வெளியானது முதலே திருச்செந்தூர் வழக்கத்தை விட கூடுதலாக களைகட்டி காணப்படுகிறது. கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தூத்துக்குடி எம்பி கனிமொழி ஆகியோர் நேரடியாக கும்பாபிஷேக பணிகளை ஆய்வு செய்தனர்.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம்

ஜூலை 7 அன்று நடைபெறும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக திருநெல்வேலி வழியாக சென்னை - செங்கோட்டை இடையே சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி சென்னை எழும்பூர் - செங்கோட்டை சிறப்பு ரயில் (06089) சென்னையில் இருந்து ஜூலை 6 அன்று இரவு 09.55 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 09.15 மணிக்கு திருநெல்வேலி வந்து சேரும். பின்பு அங்கிருந்து காலை 09.25 மணிக்கு புறப்பட்டு காலை 11.30 மணிக்கு செங்கோட்டை சென்று சேரும். மறு மார்க்கத்தில் செங்கோட்டை - சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் (06090) செங்கோட்டையிலிருந்து இரவு 07.45 மணிக்கு புறப்பட்டு இரவு 08.30 மணிக்கு திருநெல்வேலி வந்து சேரும். பின்பு அங்கிருந்து இரவு 09.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 09.05 மணிக்கு சென்னை சென்று சேரும்.

ரயில்களுக்கான பயண சீட்டு முன்பதிவு

இந்த ரயில்கள் தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், விருத்தாச்சலம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சி, மணப்பாறை, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களில் 2 குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், ஒரு குளிர்சாதன மூன்றடுக்கு அடுக்கு படுக்கை வசதி பெட்டி, 18 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 2 சரக்கு மற்றும் ரயில் மேலாளர் பெட்டிகள் இணைக்கப்படும். இந்த ரயில்களுக்கான பயண சீட்டு முன்பதிவு நேற்று வெள்ளிக்கிழமை (ஜூலை 4) காலை 8 மணி முதல் துவங்குகியது.

Read Entire Article