முதலமைச்சர் விஜயைப் பற்றி மிரட்டும் வகையில் பேசிய விளாத்திக்குளம் திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் போலீசாரால் இன்று கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் கைது

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளத்தில் கடந்த ஜூலை 18ம் தேதி நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் பேசிய அத்தொகுதி திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் முதலமைச்சர் விஜயை ஒருமையில் பேசினார். மேலும் சட்டசபையில் கதவை மூடினால் எலும்பை உடைப்பேன் என பகிரங்கமாக மிரட்டல் விடுத்தார். ஊழலில் மொத்த உருவம் முதலமைச்சர் தான் என தாறுமாறாக விமர்சித்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலான நிலையில் பலரும் முதலமைச்சரை அவதூறாக பேசியதோடு மிரட்டலும் விடுத்த இந்த விவகாரத்தில் காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.

இதற்கிடையில் தவெகவினர் அளித்த புகார் அடிப்படையில் எம்.எல்.ஏ., மார்க்கண்டேயன் இன்று கைது செய்யப்பட்டார். அவரது கைது நடவடிக்கை திமுகவினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

வழக்கு வரும் என கணித்த ஆர்.எஸ்.பாரதி

அதே நிகழ்ச்சியில் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, மார்க்கண்டேயன் பேசும்போது மிக வேகமாக பேசினார். நிச்சயமாக அவர் மீது வழக்கு வரும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. எத்தனை வழக்கு தான் உங்களால் போட முடியும். மார்க்கண்டேயன் பேசிய சொற்களின் அர்த்தம் வேறாகும். முதுகை உடைப்போம் என அவர் சொன்னது அடித்து நொறுக்குவது அல்ல. சொற்களால் நாங்கள் பேசும் ஒவ்வொரு கருத்தும் உன் எலும்பை உடைக்கும் என்று தான் சொன்னார். இதை வேறு மாதிரியாக பரப்பினாலும் அதனை எதிர்கொள்ள திமுக தயாராகி இருக்கிறது.

Also Read: உன் எலும்பு இருக்காது.. சட்டசபையை பூட்டுவியோ.. முதல்வர் விஜய்க்கு பகிரங்க மிரட்டல்!

அர்ப்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பவன் போல, அரசியல் அனுபவம் இல்லாமல், பெற்றோர், கட்டிய மனைவிக்கு சோறு போடாமல், பெற்ற குழந்தைகளை நடுத்தெருவில் விட்டு விட்டு ஒரு மன்றத்தில் வந்து ‘அப்பாவை தேடுகிறேன்’ என சொல்கிறார். அப்படி சொல்பவருக்கு அந்த அப்பாவின் புகழ், பெருமை எல்லாம் தெரியாது. திமுககாரனிடம் வாயை விட்டவன் எல்லாம் வாழ்ந்ததாக சரித்திரமில்லை. இது ஒரு மாதிரியான கட்சி. துரோகம் செய்தால் பைத்தியமாக திரிவான். கை, கால் இருக்காது, பேச வராது.

ஒரு மனிதன் தடம்புரண்டால் அரசியலில் எவ்வளவு கேவலமாக இருக்கும் என்பதற்கு ஒரு உதாரணம் வைகோ. திமுகவை அழிக்க என்னென்னவோ செய்தார்கள். நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளானான தவெக எங்களை தொட்டு பார்க்கிறது. இந்த ஆட்சி கவிழ 6 மாதம் கூட தேவையில்லை. 2 மாதங்களில் என்ன கிழித்து விட்டார் என தவெகவுக்கு மற்ற கட்சியில் இருந்து ஏன் செல்கிறார்கள். ரிசல்ட் வந்த மறுநாளே கூட்டணியை விட்டு செல்லும் அயோக்கியத்தனமான அரசியலைப் பார்த்தது இல்லை.