தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு கோடிக்கணக்கான ரூபாயை இழந்ததால், 17-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். சில தினங்களுக்கு முன் சென்னை பரங்கிமலையில் 27 வயதான விஸ்வநாத் என்ற போலீஸ்காரர் தற்கொலை செய்து கொண்டார். காவல்துறையில் பணிபுரியும் 25 முதல் 35 வயதுடைய இளம் காவலர்கள் பலர் ஆன்லைன் சூதாட்டத்தில் மூழ்கிக் கிடப்பது, டி.ஜி.பி. மகேஷ்குமார் அகர்வாலுக்கு தெரியவந்துள்ளது.

ரகசிய கண்காணிப்பு மற்றும் மொபைல் போன் தடை

இதையடுத்து, ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடும் போலீசாரை ரகசியமாக கண்காணிக்க டி.எஸ்.பி.க்கள் மற்றும் உதவி கமிஷனர்கள் தலைமையில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, ஆயுதப்படை காவலர்கள் ஆன்லைன் சூதாட்டத்தில் அதிகளவில் மூழ்கிக் கிடப்பது தெரியவந்துள்ளதால், அவர்கள் பணிபுரியும் இடங்களில் தேவையின்றி மொபைல் போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

வாராந்திர அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

இளம் வயது போலீசாரை ஆன்லைன் சூதாட்டத்தில் இருந்து மீட்பதற்கு அவர்களை கண்காணிக்க வேண்டியது அவசியமாகிறது. இதற்கான பொறுப்பு டி.எஸ்.பி.க்களிடம் ஒப்படைக்கப்பட்டு, அவர்கள் மாநிலம் முழுவதும் குழுக்கள் அமைத்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், இதுகுறித்த விவரங்களை வாரந்தோறும் டி.ஜி.பி. அலுவலகத்திற்கு அறிக்கையாக தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.