தமிழ்நாடு தலைமைச் செயலாளரை கண்டித்து நாளை தமிழ்நாடு முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்வார்கள் என்று அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.

சேலம் கோட்டை மைதானத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சேலம் மாநகராட்சி தனிக்குடி நீர் திட்டத்தை தனியார் மயமாக்குவதை ரத்து செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். இதில் திரளான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது: சேலம் மாநகராட்சி நிர்வாகம் எத்தனை குடிநீர் திட்டத்தை சூயஸ் என்ற தனியார் நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது. இந்த நிறுவனத்தில் வழங்கப்பட்ட டெண்டரை ரத்து செய்ய வேண்டும். தமிழ்நாடு தலைமைச் செயலாளர் இடதுசாரி மாணவர் அமைப்பினர் காக்ரோச் ஜனதா பார்ட்டி போராட்டங்கள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என கல்லூரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி வைத்துள்ளார். இதை வன்மையாக கண்டிக்கிறோம். தலைமைச் செயலாளரின் இந்த சுற்றறிக்கையை கண்டித்து தலைமைச் செயலாளரை கண்டித்து நாளை தமிழ்நாடு முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் செய்ய உள்ளோம். தலைமைச் செயலாளர் பதவி விலக வேண்டும் இதுபோல சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அரசு செலவில் கார் வழங்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. இதனை திரும்ப பெற வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.