தமிழ் சினிமாவில் ஜாதி பார்க்கிறார்கள்.. சினிமாவை நம்பி யாரும் இல்லை.. கலையரசன் ஆதங்கம்

5 months ago 5
ARTICLE AD

அட்டகத்தி, மெட்ராஸ், அதே கண்கள், மதயானை கூட்டம், சார்பட்டா பரம்பரை போன்ற படங்களில் நடித்து இயக்குநர்களின் நடிகர் என பாராட்டை பெறுபவர் கலையரசன். இவரது நடிப்பில் உருவாகியுள்ள டிரெண்டிங் திரைப்படத்தின் விழாவில் பேசிய கலையரசன் தமிழ் சினிமாவில் ஜாதி பார்ப்பதாக தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று நடந்த இவ்விழாவில் பெசன்ட் ரவியும் கலையரசனுக்கு ஆதரவாக பேசியதும் வைரலாகி வருகிறது.

கவனம் ஈர்த்த டிரெண்டிங் டிரைலர்

மெட்ராஸ் படத்தில் அன்பு என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து திரை ரசிகர்களிடையே பிரபலமானவர் கலையரசன். தற்போது இவரது நடிப்பில் உருவாகியுள்ள டிரெண்டிங் படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. யூடியூப் டிரெண்டிங்கை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தை அறிமுக இயக்குநர் சிவராஜ் இயக்கியுள்ளார். இப்படத்தின் டிரைலரில் இடம்பெற்ற ஒரு வசனம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஆண்கள் ஆடையை கழட்டினால் யார் பார்ப்பார்கள்? முகம் அடையாளம் இல்லைனாலும், அவரும் பெர்வர்ட்தான் என இடம்பிடித்திருக்கிறது. டிரெண்டிங் திரைப்படம் வரும் 18ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

தமிழ் சினிமாவில் ஜாதி

இந்நிலையில், டிரேண்டிங் பட விழாவில் பேசிய கலையரசன், தமிழ் சினிமாவில் ஜாதி இல்லை என சொல்கிறார்கள். ஆனால் அது மிக மோசமான அளவில் இருக்கிறது. நான் இயக்குனர் ரஞ்சித் உடன் இருப்பதால் எனக்கு பட வாய்ப்புகள் மறுக்கப்படுகிறது. பலரும் என்னை நடிக்க அழைக்க யோசிக்கிறார்கள் என கூறியிருப்பது சர்ச்சையாக மாறியுள்ளது. மேலும், நான் எடுக்கும் ஒவ்வொரு முடிவையைும் அவரை கேட்டு தான் செய்கிறேன். இதுவரை அவர் சொன்னது சரியாக அமைந்திருக்கிறது. சில நேரங்களில் திறமைகள் மதிக்கப்படுவதில்லை என ஆதங்கத்துடன் பேசியிருந்தார். இவரது பேச்சு பேசுபொருளாகியிருக்கிறது. மேலும், சின்ன படம் பெரிய படம் என்று எதுவும் இல்லை. கன்டன்ட் தான் முக்கியம் எது பெரியம் என்பதை மக்கள் தான் முடிவு செய்கிறார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

திறமையானவர்களுக்கு வாய்ப்பு கொடுங்க

அவரைத் தொடர்ந்து பேசிய நடிகர் பெசன்ட் ரவி, கலையரசனை எனக்கு நன்றாக தெரியும். நான் இருக்கும் ஏரியாவில் தான் அவரும் இருக்கிறார். இப்போது வரை அவர் வாடகை வீட்டில் தான் வசித்து வருகிறார். சார் தயவு செய்து திறமையானவர்களுக்கு வாய்ப்பு கொடுத்து அவர்களை உயர்த்தி விடுங்கள். நாங்க சினிமாவில் இருந்த போது திறமையை நம்பிதான் இயக்குநர்கள் வாய்ப்பு கொடுத்தார்கள். நான் சினிமாவிற்கு வந்து 30 வருடங்கள் ஆகிவிட்டது. ஆனால், இப்போது அப்படி இல்லை. முதல் படத்தில் சிறப்பாக நடிப்பவர், அடுத்த 3 படத்தில் காணாமல் போய்விடுகிறார். இப்போது யாரும் சினிமாவை நம்பி வருவது கிடையாது. திறமையான நடிகர்களை தேர்வு செய்து நடிக்க வைத்து சினிமாவை காப்பாத்துங்க என மன வேதனையுடன் பெசன்ட் ரவி தெரிவித்தார்.

Read Entire Article