இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கவுள்ளதாக சமீபத்தில் பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தன. ஆனால் அந்த தகவல்களுக்கு தற்போது எச். வினோத் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். சமீபத்திய பேட்டியில் பேசிய அவர், தனுஷுடன் திட்டமிட்டிருந்த படம் தற்போது நடைபெறவில்லை என்று தெளிவு படுத்தியுள்ளார்.

முதல்வர் விஜயின் ஜனநாயகன் திரைப்படம் நாளை ஜூலை 23 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. படத்தின் இயக்குநர் எச் வினோத் ஒரே நபராக இந்த படம் குறித்த பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று ப்ரோமோட் செய்து வருகிறார். ஜனநாயகன் திரைப்படம் குறித்து பல்வேறு தகவல்களை பகிர்ந்துகொண்டதுடன் சமீபத்தில் திரை வட்டாரங்களில் பேசுபொருளான பல நிகழ்வுகள் குறித்தும் எச் வினோத் பேசியுள்ளார்

ராயன் தேசிய விருது விமர்சனம் குறித்து

ராயன் திரைப்படத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது ரசிகர்களிடையே பேசுபொருளானது. விருதுத் தேர்வு குழுவின் முடிவை பலரும் விமர்சித்து வருகிறார்கள். இதுகுறித்து எச் வினோத் பேசுகையில் " தேசிய விருதில் தவறு நடந்திருந்தால், அடுத்த முறை அதைச் சரிசெய்து கொள்ள வேண்டும். ஒரு சிறிய குழுவின் முடிவின் அடிப்படையிலேயே விருதுகள் வழங்கப்படுகின்றன. மேலும், தேசிய விருதுகளுக்கான போட்டியில் நமது திரைப்படங்களைச் சரியாக முன் நிறுத்த வேண்டும். அத்துடன், தேர்வுக் குழு உறுப்பினர்கள் நமது படத்தைப் பார்த்திருக்கிறார்களா என்பதை உறுதிப்படுத்திக்கொண்டு, அது குறித்துத் தொடர்ந்து அவர்களைத் தொடர்புகொண்டு பேச வேண்டும். ஒரு நல்ல திரைப்படம் வைத்திருப்பது மட்டுமே தேசிய விருதுக்குத் தகுதி பெற்றுத் தந்துவிடாது.

தனுஷ் படம் குறித்து எச் வினோத்

எச் வினோத் அடுத்தபடியாக தனுஷ் படத்தை இயக்கவிருப்பதாக அண்மையில் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டது. இதுதுகுறித்து பேசிய எச். வினோத், "தனுஷ் சாருடன் திட்டமிட்ட படம் தற்போது நடைபெறவில்லை. அவரிடம் ஏற்கனவே நிறைய படங்கள் வரிசையாக உள்ளன. நாங்கள் திட்டமிட்டிருந்த பட்ஜெட்டும் சரியாக அமையவில்லை. அதனால் அந்த படம் கைவிடப்படலாம் அல்லது நீண்ட காலத்திற்கு ஒத்திவைக்கப்படலாம்" என்று கூறினார்.

மேலும், "தனுஷ் மற்றும் விஜய் சேதுபதி இருவரையும் ஒரே படத்தில் இயக்க வேண்டும் என்பது எனது விருப்பம். அது சாத்தியமாகவில்லை என்றாலும், இருவருடனும் தனித்தனியாக படங்கள் இயக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது" என்றும் தெரிவித்துள்ளார்.