தனியார் பள்ளி ஆசிரியரிடம் ரூ.57.45 லட்சம் பணம் மோசடி: சைபர் க்ரைம் போலீசார் தீவிர விசாரணை

3 months ago 7
ARTICLE AD

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் தங்கி தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வரும் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவரிடம் இருந்து ஆன்லைன் வர்த்தகம் மற்றும் முதலீட்டில் அதிக லாபம் கிடைக்கும் என்று கூறி ரூ. 57.45 லட்சம் பணத்தை மோசடி செய்த மர்மநபர்களை சைபர் க்ரைம் போலீசார் தேடிவருகின்றனர்

தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் பி.ராஜசேகர ராவ் (41). (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் தற்போது தஞ்சாவூர் நகர் பகுதியில் தங்கி ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் 21.09.25ம் தேதி ராஜசேகர ராவ்-ன் ஃபேஸ்புக்  மற்றும் வாட்ஸ்அப்பிற்கு ஒரு தகவல் வந்துள்ளது. அதில் ஆன்லைன் வர்த்தகத்தில் அதிக லாபம் ஈட்டலாம். முதலீடு செய்தால் லட்சக்கணக்கில் பணம் கிடைக்கும் என்று குறிப்பிடப்பட்டு இருந்துள்ளது.

இதற்கிடையில் ராஜசேகர ராவை பேஸ்புக் மற்றும் அவரது வாட்ஸ்  வாயிலாக மர்மநபர் தொடர்புகொண்டு பேசியுள்ளார். அப்போது ஆன்லைன் வர்த்தகம் மற்றும் முதலீட்டுத் திட்டம் குறித்து கூறி அதிக லாபம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார். தொடர்ந்து அந்த மர்ம நபர் தெரிவித்த வங்கி கணக்குகளில் கடந்த 20.10.25 வரை 11 ஆன்லைன் பரிவர்த்தனைகள் மூலம் ராஜசேகர ராவ் மொத்தம் ரூ. 57.45 லட்சம் பணத்தை செலுத்தியுள்ளார்.

ஆனால் அந்த மர்மநபர் கூறியது போன்று எவ்வித லாப பணமும் ராஜசேகர ராவிற்கு வரவில்லை. இதனால் அந்த மர்மநபரை தொடர்பு கொள்ள முயன்றுள்ளார். ஆனால் அவர் ராஜசேகர ராவின் தொடர்புகளைப் புறக்கணித்துள்ளார். இதையடுத்து மீண்டும் தொடர்பு கொள்ள முயன்ற போது செல்போன் எண் சுவிட்ஸ் ஆப் என்று வந்துள்ளது. இதையடுத்தே தான் ஏமாற்றப்பட்டதை ராஜசேகர ராவ் உணர்ந்துள்ளார். தொடர்ந்து இதுகுறித்து ராஜசேகர ராவ் தஞ்சாவூர் சைபர் க்ரைம் போலீசில் புகார் செய்தார்.

இதன்பேரில் இன்ஸ்பெக்டர் ரவிமதி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் ராஜசேகரராவ் பணம் அனுப்பி வங்கி கணக்குகள் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்காளம், உத்தரபிரதேசம், கர்நாடகா, மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ளவை என்று தெரிய வந்தது. தொடர்ந்து ராஜசேகர ராவை பணமோசடி செய்த மர்மநபர்களை சைபர் க்ரைம் போலீசார் தேடி வருகின்றனர்.

கார் வாங்கி வருவதாக கூறி  தொழிலதிபரிடம் பணம் மோசடி

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்த தொழிலதிபரிடம் இருந்து கார் வாங்கி தருவதாக கூறி ரூ.2.30 லட்சம் பணத்தை மோசடி செய்த மர்மநபர்களை சைபர் க்ரைம் போலீசார் தேடி வருகின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே கிராமப்பகுதியை சேர்ந்தவர் அ.சாதிக் (51). (பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவர் டைல்ஸ் விற்பனை நிலையம் வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த 17.7.2026ம் தேதி அன்று அவரது இன்ஸ்டாகிராம் (Instagram) கணக்கு மர்ம நபர் ஒருவர் தொடர்பு கொண்டார். அந்த மர்ம நபர் தன்னை கார் விற்பனையாளராக அறிமுகப்படுத்திக் கொண்டுள்ளார்.

பின்னர் சாதிக் அந்த மர்மநபரிடம் கார் வாங்குவது குறித்து விசாரித்துள்ளார். அப்போது அந்த மர்மநபர் கார் உள்ளது. அதற்கு முன்பணம், ஆவணங்கள் அனுப்ப  கூரியர் கட்டணம் மற்றும் போக்குவரத்துச் செலவுகள் என மொத்தம் ரூ. 2,30,000/- பணம் செலுத்துங்கள் என்று தெரிவித்துள்ளார். இதை உண்மை என்று நம்பிய சாதிக் மூன்று தவணைகளாக இணையவழிப் பரிவர்த்தனை மூலம் அந்த மர்மநபர் கூறிய வங்கி கணக்கில் ரூ.2,30,000ஐ செலுத்தி உள்ளார்.

பணம் அனுப்பிய பின்னர் சாதிக் அந்த மர்மநபரை தொடர்பு கொள்ள முயன்றுள்ளார். ஆனால் அவரது செல்போன் எண் சுவிட்ஸ் ஆப் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து சாதிக் 27ம் தேதி தஞ்சாவூர் சைபர் க்ரைம் போலீசில் இதுகுறித்து புகார் செய்தார். இதன்பேரில் இன்ஸ்பெக்டர் ரவிமதி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இதுகுறித்து சைபர் க்ரைம் போலீசார் தரப்பில் கூறுகையில், நிதி மோசடி, போலி செயலிகள், சமூக வலைதள மோசடிகள், ஆன்லைன் டிரேடிங்கில் டெபாசிட் செய்ய சொல்வது போன்ற குற்றங்களைத் தடுக்க, 1930 என்ற உதவி எண்ணுடனும், cybercrime.gov.in இணையதளத்துடனும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.

முக்கியமாக, அறியாத அழைப்புகளை ஏற்காமல் இருப்பது, தனிப்பட்ட தகவல்களைப் பகிராமல் இருப்பது, பொது வைஃபையைப் பயன்படுத்தாமல் இருப்பது, போலி இணைப்புகளை (Links) கிளிக் செய்யாமல் இருக்க வேண்டும். மேலும் வங்கியிலிருந்து பேசுகிறோம் ஓடிபி வந்து இருக்கும் என்று வரும் அழைப்புகளை நம்பி ஏமாறக்கூடாது என்று தெரிவித்தனர்.

Read Entire Article