தஞ்சையில் பனை மரங்கள் சட்டவிரோதமாக வெட்டப்பட்டுள்ளது : உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

3 months ago 7
ARTICLE AD

தஞ்சை மாவட்ட ஆற்று புறம்போக்கு நிலத்தில் இருந்த பனை மரங்களை சட்டவிரோதமாக வெட்டிய நபர் மீது உரிய நடவடிக்கை கோரிய வழக்கில், மனுதாரர் அளித்த புகாரின் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து பேராவூரணி காவல் ஆய்வாளர் நிலை அறிக்கை தாக்கல் செய்ய மதுரை அமரவு உத்தரவு.

மதுரை அமர்வில் பொதுநல வழக்கு

தஞ்சையைச் சேர்ந்த சந்திரசேகர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "தஞ்சை, பேராவூரணி, ஆதனூர் கிராமத்தில் ஆற்று புறம்போக்கு இடத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பனை மரங்கள் உள்ளன. இந்த இடத்தை ஆதனூரைச் சேர்ந்த ஜான்போஸ்கோ என்பவர் ஆக்கிரமித்து வைத்துள்ளதோடு, இந்நிலத்திலிருந்த 50க்கும் மேற்பட்ட பனை மரங்களை அதிகாரிகளிடம் அனுமதி எதுவும் பெறாமல் சட்டவிரோதமாக வெட்டி உள்ளார். எனவே  பனை மரங்களை சட்டவிரோதமாக வெட்டிய நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், சக்திவேல் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், "இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை" என தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து நீதிபதிகள், "மனுதாரர் அளித்த புகாரின் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து பேராவூரணி காவல் ஆய்வாளர் நிலை அறிக்கை தாக்கல் செய்யவும், தவறினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்து வழக்கை ஜூலை 22 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

Read Entire Article